Morning Quotes : உங்கள் குடல் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமா? இதோ இந்த காலை உணவை முயற்சியுங்கள்!
Morning Quotes : உங்கள் குடல் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமா? இதே இந்த காலை உணவை முயற்சியுங்கள், வித்யாசமான ப்ரேக் ஃபாஸ்ட் மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் ஆகும்.
கிவி பழத்துடன் வாழைப்பழம் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த காலை உணவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
காலையில் நாம் வயிறு மற்றும் குடலுக்கு ஏற்ப ஒரு காலை உணவை உட்கொள்ளவேண்டும். ஐஸ்கிரீமுக்கு பதில் யோகர்ட், கெட்டியான யோகர்ட் உங்களுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்ட உணர்வைத்தரும். இதில் எண்ணற்ற புரதமும், நட்ஸ்களில் இருந்து கிடைக்கும் சத்துக்களும், வாழைப்பழத்தின் நன்மைகளும் கிடைக்கும். அப்படி என்ன ஒரு ப்ரேக் ஃபாஸ்ட் என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
பாதாம் பட்டர் – கால் கப்
கோகோ பவுடர் – ஒரு டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 3 டேபிள் ஸ்பூன்
மேபிள் சிரப் – 2 ஸ்பூன்
ஹெவி கிரீம் – கால் கப்
வாழைப்பழம் – 4 (நன்றாக பழுத்த வாழைப்பழத்தை இரண்டாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவேண்டும்)
கொழுப்பு குறைந்த தேங்காய் யோகர்ட் – ஒரு கப்
கொழுப்பு குறைந்த செரி யோகர்ட் – ஒரு கப்
கிவிப்பழம் – அரைகப் (பொடியாக நறுக்கியது)
கிரானோலா – (ஓட்ஸ், நட்ஸ் கலந்த கலவை, கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும்)
பிஸ்தா – ஒரு டேபிள் ஸ்பூன்
பரங்கிக்காய் விதைகள் – ஒரு டேபிள் ஸ்பூன்
சியா விதைகள் – ஒரு ஸ்பூன்
ஃப்ளாக்ஸ் விதைகள் – ஒரு ஸ்பூன்
செய்முறை
முதலில் பாதாம் பட்டர், கோகோ பவுடர், தண்ணீர் மற்றும் மேபிள் சிரப் ஆகிய அனைத்தையும் ஒரு பவுலில் சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். அது நல்ல மிருதுவான பேஸ்ட்டாக இருக்கவேண்டும்.
ஹெவி கிரீம் மற்றும் மேபிள் சிரப்பை தனியாகக் கலந்துவைத்துக்கொள்ளவேண்டும். அது மிதுவாக மாறும்.
ஒரு தட்டில் நீளவாக்கில் வெட்டிய வாழைப்பழத்தை வைக்கவேண்டும். ஒரு ஐஸ்கிரீம் ஸ்கூப்பைப் பயன்படுத்தி, தேங்காய் மற்றும் செரி யோகர்டை அதன் மேல் அழகாக படரவிடவேண்டும்.
அதன் மேல் பாதாம் சாஸை தூவவேண்டும். அதன் மேல் கிவி, கிரானோலா, பிஸ்தாக்கள், பரங்கிக்காய் விதைகள், சியா, ஃப்ளாக்ஸ் விதைகளை தூவவேண்டும். அதன் மேல் தயாரித்த கிரீமை வைத்து, ஸ்பூனில் எடுத்து சாப்பிட சுவை அள்ளும். ஆரோக்கியமான சுவை நிறைந்த காலை உணவு இது.
வழக்கமாக காலை உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல், உப்புமா என சாப்பிடுவதற்கு பதில், இதை சாப்பிடும்போது, சுவை அள்ளும். இதனால் உங்கள் ஆரோக்கியமும் மேம்படும். வழக்கமான சாப்பாட்டை நீங்கள் சாப்பிடவேண்டிய தேவையில்லை.
இந்த காலை உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
இதில் 584 கலோரிகள் உள்ளது. 30 கிராம் கொழுப்பு, 65 கிராம் கார்போஹைட்ரேட், 22 கிராம் புரதம் ஆகியவை உள்ளது. உங்களுக்கு தினசரி தேவையான அளவில் 32 சதவீதம், அதாவது 9 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. சர்க்கரை 37 கிராம், கூடுதல் சர்க்கரை 10 கிராம், புரதம் 22 கிராம், கொழுப்பு 30 கிராம், சாச்சுரேடட் கொழுப்பு 9 கிராம், கொழுப்பு 26 மில்லி கிராம், வைட்டமின் ஏ அன்றாட தேவையில் 9 சதவீதம், வைட்டமின் சி 32 மில்லி கிராம், வைட்டமின் டி அன்றாட தேவையில் 3 சதவீதம், வைட்டமின் இ 5 மில்லி கிராம், ஃபோலேட் 51 மைக்ரோகிராம், வைட்டமின் கே 13 மைக்ரோகிராம், சோடியம் 112 மில்லிகிராம், கால்சியம் 237 மில்லி கிராம், இரும்புச்சத்து 2 மில்லி கிராம், மெக்னீசியம் 126 மில்லி கிராம், பொட்டாசியம் 915 மில்லிகிராம், சிங்க் 2 மில்லிகிராம் உள்ளது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்