TAMIL DEBUT DIRECTOR: சாதிய ஒடுக்குமுறை இருக்கும் வரை..சாதி பிரச்னைகளுக்கு ஆறுதல் - அறிமுக இயக்குநர் ஜெயகுமார் கருத்து-movies like blue star comforts for those who facing caste problems says tamil debutant director jayakumar - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Debut Director: சாதிய ஒடுக்குமுறை இருக்கும் வரை..சாதி பிரச்னைகளுக்கு ஆறுதல் - அறிமுக இயக்குநர் ஜெயகுமார் கருத்து

TAMIL DEBUT DIRECTOR: சாதிய ஒடுக்குமுறை இருக்கும் வரை..சாதி பிரச்னைகளுக்கு ஆறுதல் - அறிமுக இயக்குநர் ஜெயகுமார் கருத்து

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 23, 2024 10:36 AM IST

Tamil Debut Director Blue star Jayakumar: சாதிய ஒடுக்குமுறை இருக்கும் வரை இது போன்ற படங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கும். சாதி பிரச்னைகளால் சிக்கி தவிப்பவர்களுக்கு ஆறுதலாக இந்த படங்கள் இருக்கின்றன என்ற ப்ளூ ஸ்டார் படம் குறித்து அறிமுக இயக்குநர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

Tamil Debut Director Blue star Jayakumar: சாதிய ஒடுக்குமுறை இருக்கும் வரை..சாதி பிரச்னைகளுக்கு ஆறுதல் - அறிமுக இயக்குநர் ஜெயகுமார் கருத்து
Tamil Debut Director Blue star Jayakumar: சாதிய ஒடுக்குமுறை இருக்கும் வரை..சாதி பிரச்னைகளுக்கு ஆறுதல் - அறிமுக இயக்குநர் ஜெயகுமார் கருத்து

பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநரான எஸ். ஜெயகுமார், நட்பு, காதல் ஆகியவற்றுடன் இரு தரப்பினருக்கு ஏற்படும் பொது பிரச்னை, அதனால் ஏற்படும் தாக்கம் மாற்றம் போன்ற சமூக அக்கறை கொண்ட கருத்துகளோடு சொல்லியிருப்பார். பா. ரஞ்சித் போல் சென்னை ஓவிய கல்லூரி மாணவராக இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த இயக்குநராக எஸ். ஜெயகுமார் இருக்கிறார்.

ப்ளூ ஸ்டார் படம் பற்றி இயக்குநர் எஸ். ஜெயகுமார்

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட் எல்லோருக்கும் தெரிந்த விளையாட்டாகவும் , பிடித்தமான விளையாட்டாகவும் மாறிவருகிறது. சிற்றூர்கள் முதல் குக்கிராமங்கள் வரை கிரிக்கெட் என்பது இளைஞர்கள் மத்தியில் வெகுபிரபலம்.

அரக்கோணம் பக்கத்திலிருக்கும் சிறிய ஊரில் வாழ்கிற இளைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் விளையாட்டு , காதல், நட்பு , அரசியல், கொண்டாட்டம் என ஜனரஞ்சகமான படமாக ப்ளூ ஸ்டார் உருவாகியுள்ளது. படம்தான் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் , பிரித்வி பாண்டியராஜன் ஆகியோர் ஏற்கனவே நன்றாக கிரிக்கெட் விளையாடக்கூடியவர்களாக இருந்தது படத்துக்கு பெரும் பலமாக அமைந்தது.

இந்தப்படம் இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இப்போது விளையாடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் என அனைவருக்கும் இந்தப்படம் நெருக்கமான உணர்வைத்தரக்கூடியபடமாக இருக்கும்.

இந்தப் படத்துக்காக முழுக்க அரக்கோணம் ஊர் பசங்களாகவே நடிகர்கள் எல்லோரும் மாறிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்கிறது, கோவிந்த் வசந்தா பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையும் அற்புதமாக அமைத்திருக்கிறார்.

கிரிக்கெட்டில் சாதிய பாகுபாடு

அசோக் செல்வன் கேரக்டர் என சொந்த அண்ணனை வைத்து உருவாக்கினேன். அதேபோல் சாந்தனு கேரக்டரும் என் உறவு முறை அண்ணன் கேரக்டரை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டேன். இவர்களில் வாழக்கையில் நடந்த சம்பவங்களுடன் பல கற்பனைகளையும் சேர்த்து படத்தை உருவாக்கினேன். அதேபோல் ப்ளூ ஸ்டார் என்ற கிரிக்கெட் அணி நான் வசிக்கும் பகுதியில் உள்ளது.

கிரிக்கெட் விளையாட்டு இந்தியா முழுவதிலும் சாதி பிரச்னை உள்ளது. இப்பவும் கூட கிளப்களில் கிரிக்கெட் விளையாடுவதற்கு தகுதி இல்லை என நிராகரிக்கப்படும் கிரிக்கெட் அணிகள் ஏராளமாக இருக்கின்றன.

எனவே சாதிய பாகுபாடுகளை மறைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாடினால், விளையாட்டில் பல வெற்றிகளுடன் பதக்கங்களையும் நாம் வெல்லலாம்.

சாதிய ஒடுக்குமுறை இருக்கும் வரை இது போன்ற படங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கும். சாதி பிரச்னைகளால் சிக்கி தவிப்பவர்களுக்கு ஆறுதலாக இந்த படங்கள் இருக்கின்றன.

சென்சாருக்கு மறுப்பு

ப்ளூ ஸ்டார் படத்தின் பணிகள் முடிந்து சென்சாருக்கு அனுப்பியபோது அதை பார்த்த அதிகாரிகள், படம் வெளியாககூடாது கூறினார்களாம். இதற்கு காரணமாக படத்தில் கம்யூனல் விஷயங்கள் ஏராளமாக இருப்பதாகவும் விளக்கம் அளித்தார்களாம்.

இதன் பிறகு ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பபட்ட நிலையில், சில கேரக்டரின் பெயர் மாற்றங்களுக்கு சென்சார் வழங்கி ரிலீஸுக்கு அனுமதித்துள்ளனர். இது பற்றி படத்தின் வெற்றி விழா மேடையில் ரஞ்சித் பேசும்போது, "எனது நிறுவனமான நீலம் தயாரிப்புல இருந்து வர்ற படங்களை பிரச்னைகளோடதான் சென்சார்ல அணுகுகிறார்கள்.

ஒரு படம் எல்லோரும் சமம், வேறுபாடு இருக்கக்கூடாது என்கிற கருத்தை சொல்கிறது.

இந்த கருத்துக்கும் மாற்றுக் கருத்துள்ளவர்கள் சென்சார் போர்டில் இருப்பதை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது" என்றார்.

கிரிக்கெட்டில் சாதிய ஒடுக்குதல் எப்படி ஆக்கிரமித்துள்ளன என்பதையும் அதில் நிலவும் அரசியலையும் பேசி கவனிக்க வைத்துள்ளார். வேறுபாடு உடைக்க அனைவரும் சேர்ந்ததால் முடியும் என்கிற கருத்தை இருந்த ப்ளூ ஸ்டார் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுக இயக்குநராக ஸ்டார் ஆகியுள்ளார் இயக்குநர் எஸ். ஜெயக்குமார்.

ப்ளூஸ்டார் திரைப்படம்

இளைஞர்களை வெகுவாக கவர்ந்ததுடன், விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்ற ப்ளூ ஸ்டால் திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியானது. படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ருத்வி ராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, இளங்கோ குமரவேல், பகவதி பெருமாள், லிஸி ஆண்டனி உளஸ்பட பலரும் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா படத்துக்கு இசையமைத்துள்ளார். ப்ளூ ஸ்டார் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.