Morning Quotes : இந்த உணவுகளையெல்லாம் 100 கிராம் எடுத்தாலே போதும்! உங்களுக்கு தேவையான புரதம் கிடைத்துவிடும்!-morning quotes just take 100 grams of all these foods youll get the protein you need - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : இந்த உணவுகளையெல்லாம் 100 கிராம் எடுத்தாலே போதும்! உங்களுக்கு தேவையான புரதம் கிடைத்துவிடும்!

Morning Quotes : இந்த உணவுகளையெல்லாம் 100 கிராம் எடுத்தாலே போதும்! உங்களுக்கு தேவையான புரதம் கிடைத்துவிடும்!

Priyadarshini R HT Tamil
Sep 21, 2024 05:42 AM IST

Morning Quotes : இந்த உணவுகளையெல்லாம் 100 கிராம் எடுத்தாலே போதும். உங்களுக்கு தேவையான புரதச்சத்துக்கள் கிடைத்துவிடும். எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Morning Quotes : இந்த உணவுகளையெல்லாம் 100 கிராம் எடுத்தாலே போதும்! உங்களுக்கு தேவையான புரதம் கிடைத்துவிடும்!
Morning Quotes : இந்த உணவுகளையெல்லாம் 100 கிராம் எடுத்தாலே போதும்! உங்களுக்கு தேவையான புரதம் கிடைத்துவிடும்!

சிக்கன் பிரஸ்ட்

எலும்பில்லாத, தோல் இல்லாத சிக்கன் பிரஸ்ட்டில் 31 கிராம் பரதச்சத்துக்கள் உள்ளது. இது மிக முக்கியமான புரதம் ஆகும். இது தசைகளின் வளர்ச்சிக்கும், எடை மேலாண்மைக்கும் சிறந்தது.

சூரை மீன்கள்

சூரை மீன்களில் 29 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் புரதம் மட்டும் அதிகம் அல்ல. இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்களும் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.

வான்கோழி

வான்கோழியின் பிரஸ்டில் 29 கிராம் புரதம் உள்ளது. சிக்கனைப்போல் வான்கோழி பிரஸ்டில் அதிக புரதம் உள்ளது. இது கொழுப்பு குறைந்த உணவுக்கு சிறந்த தேர்வு ஆகும். இதில் புரதமும் அதிகம்.

பாதாம்

பாதாமில் 21 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் தாவர புரதம் அதிகம் உள்ளது. இதில் ஆரோக்கிய கொழுப்புகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துக்கள் உள்ளது. இது இதயம் மற்றும் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

சால்மன் மீன்

100 கிராம் சால்மன் மீனில், 25 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் உயர்தர புரதம் மற்றும் உடலுக்கு தேவையான ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் தாவர புரதங்கள் அதிகளவில் கிடைக்கிறது. இதில் இருந்து 24 கிராம் புரதம் கிடைக்கும். பருப்பு வகைகளில், நார்ச்சத்துக்கள் அதிகம், இது உங்கள் இதய ஆரோக்கியம் மற்றும் செரிமானத்துக்கு உதவுகிறது.

கிரீக் யோகர்ட்

கொழுப்பில்லாத பிளைன் யோகர்டிர் 10 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. கிரின் யோகர்ட்டில் புரதங்கள், ப்ரோபயோடிக்குகள் உள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் தசைகளை சரிசெய்து மேம்படுத்துகிறது.

காட்டேஜ் சீஸ்

100 கிராம் சீஸில் 11 கிராம் புரதச்சத்து உள்ளது. காட்டேஜ் சீஸ் அல்லது பன்னீரில் புரதம் அதிகம் உள்ளது. இது மெதுவாக செரிக்கும் தன்மைகொண்டது. உங்கள் இது நல்ல ஸ்னாக்ஸ் ஆகும். மேலும் இது தினசரி தசைகளை வலுப்படுத்துகிறது.

முட்டை

இரண்டு மூட்டைகளில் 13 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் புரதம் மட்டுமின்றி தேவையான அமினோஅமிலங்கள் உள்ளதால், இதை நீங்கள் உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

டோஃபூ

100 கிராம் டோஃபூவில் 8 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இது தாவர புரதம் ஆகும். இதை சைவ உணவுகள் மட்டுமே உட்கொள்பவர்கள் எடுத்துக்கொள்ளும்போது, அவர்களுக்கு தேவையான புரதச்சத்துக்கள் கிடைத்துவிடும். இதில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.