Onion Pakoda : மழையின் ஃபெஸ்ட் ஃபிரண்ட்! வேறென்ன? வெங்காய பக்கோடா செய்ய கத்துகோங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Onion Pakoda : மழையின் ஃபெஸ்ட் ஃபிரண்ட்! வேறென்ன? வெங்காய பக்கோடா செய்ய கத்துகோங்க!

Onion Pakoda : மழையின் ஃபெஸ்ட் ஃபிரண்ட்! வேறென்ன? வெங்காய பக்கோடா செய்ய கத்துகோங்க!

Priyadarshini R HT Tamil
Nov 04, 2023 11:00 AM IST

Onion Pakoda : மழையின் ஃபெஸ்ட் ஃபிரண்ட்! வேறென்னங்க வெங்காய பக்கோடாதான், மழை, டீ, வெங்காய பக்கோடா, இளையராஜா என நமது ஊர்மக்கள் கவிதை எழுதுவார்கள். வெங்காய பக்கோடா செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Onion Pakoda : மழையின் ஃபெஸ்ட் ஃபிரண்ட்! வேறென்ன? வெங்காய பக்கோடா செய்ய கத்துகோங்க!
Onion Pakoda : மழையின் ஃபெஸ்ட் ஃபிரண்ட்! வேறென்ன? வெங்காய பக்கோடா செய்ய கத்துகோங்க!

மழை, பக்கோடா, டீ, இளையராஜா பாடல் என ஸ்டேஸ்களை இன்று சமூக வலைதளங்களில் மக்கள் போட்டு மகிழ்கிறார். இந்த மழையும், பக்கோடவும் குறித்த மீம்ஸ்களும் பிரபலம். கிட்டத்தட்ட ஒரு பட்டி மன்றமே நடத்தாத குறையாக அந்தளவுக்கு மழை பக்கோடா ஒரு விவாதம் நிறைந்த ஒன்றாகவும், அடிக்கடி பேசக்கூடிய ஒன்றாகவும் உள்ளது. இந்த மழையில் பக்கோடா செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

வெங்காயம் - 5 மெல்லியதாக நறுக்கியது

பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கியது

இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

கொத்தமல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

சீரக தூள் - 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடலை மாவு - 1 கப்

தண்ணீர்

எண்ணெய்

செய்முறை

வெங்காயத்தை நீளமாக மெல்லியதாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

இதனுடன், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், கொத்தமல்லித்தூள், சீரகத்தூள், உப்பு, கடலை மாவு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்

கொஞ்சம், கொஞ்சமா தண்ணீர் ஊற்றி பிசையவேண்டும்.

வெங்காயத்தில் மசாலா ஓட்டும் அளவு தண்ணீர் ஊற்றினால் போதும்.

கடாயில் எண்ணெய் சூடு செய்து சிறிய அளவு வெங்காய கலவையை போடவேண்டும்.

இவையனைத்தும் பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவேண்டும்.

மழை நேரத்தில் டீயுடனும், சாதாரண காலங்களில் தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ளவும் ஏற்றது.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.