HT Yatra: தானாக பாலாபிஷேகம் செய்த பசு.. ரத்தம் வழிந்த முருகன் சிலை
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: தானாக பாலாபிஷேகம் செய்த பசு.. ரத்தம் வழிந்த முருகன் சிலை

HT Yatra: தானாக பாலாபிஷேகம் செய்த பசு.. ரத்தம் வழிந்த முருகன் சிலை

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 16, 2024 06:00 AM IST

சென்னிமலை தண்டாயுதபாணி திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

சென்னிமலை தண்டாயுதபாணி திருக்கோயில்
சென்னிமலை தண்டாயுதபாணி திருக்கோயில்

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த முருகன் கோயில்களில் ஒன்றுதான் சென்னிமலை முருகன் கோயில். புகழ்பெற்ற அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும்.இந்த கோயில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது என கூறப்படுகிறது.

தல வரலாறு 

 

வாயு தேவருக்கும் அனந்தன் என்ற நாகத்திற்கும் இடையே மிகப்பெரிய போட்டி ஒன்று ஏற்பட்டது தான் பெரியவர் என சண்டையில் ஈடுபட்டனர் அவர்கள் இருவரும் சண்டை போட்ட பொழுது மேருமலை உடைந்து கீழே பல பிரிவுகளாக விழுந்தன. அந்த மலையின் உச்சத்தில் இருந்த பகுதி பூந்துறை என்ற இடத்தில் விழுந்தது. அந்த இடமே தற்போது சென்னிமலை என அழைக்கப்படுகிறது.

இந்த மலையில் ஆள் இல்லாத ஒரு பகுதியில் பசு ஒன்று தினமும் பால் சொரிவதை அதன் உரிமையாளர் கண்டுள்ளார். ஏதுமில்லாத இடத்தில் எதற்கு தினமும் பசு பாலை கறந்து விட்டு செல்கிறது என உரிமையாளர் அந்த இடத்தில் தோண்டி பார்த்தார்.

அப்போது அழகிய தோற்றத்தில் முருகப்பெருமானின் சிலை அங்கே இருந்துள்ளது. அந்த சிலையில் தலையில் இருந்து இடுப்பு வரை அழகாக செதுக்கப்பட்டு இருந்தது இடுப்பிலிருந்து கால்வரை சற்று கரடு முரடாக இருந்துள்ளது. உடனே ஒரு சிற்பியை வரவழைத்து அந்த பாகத்தையும் சரி செய்யும் படி கூறியுள்ளார்கள்.

உளி கொண்டு அந்த சிலையை சரி செய்யும் பொழுது சிலையிலிருந்து ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது எனவே எப்படி எடுக்கப்பட்டதோ அதே நிலையில் அந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னிமலை ஆண்டவர் என அழைக்கப்படும் முருக பெருமான். நவகிரகங்களில் செவ்வாய் பகவானின் அம்சமாக வீற்றிருக்கின்றார் மூலவர் சுற்றி மற்ற எட்டு கிரகங்களும் அமர்ந்து அருள் பாலித்து வருகின்றனர். இந்த முருக பெருமானை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் அனைத்து சிக்கல்களும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது.

செவ்வாய் பகவானால் ஏற்படும் சிக்கல்களுக்கு இந்த திருத்தலம் பரிகாரத்தலமாக திகழ்ந்து வருகின்றது. இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமான் தண்டாயுதபாணி கோளத்தில் காட்சி அளித்து வருகின்றார். ஒரே கல்லினால் செய்யப்பட்ட வள்ளி, தெய்வானை இருவரும் தனி தனி சன்னதி கொண்டு இந்த கோவிலில் வீற்றிருப்பது தனி சிறப்பாகும்.

முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் நைவேத்தியம் செய்வதற்கான பொருட்கள் அனைத்தும் கோயிலால் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் பொது காளைகள் மூலம் தினமும் அடிவாரத்தில் இருந்து எடுத்து வரப்படுகிறது.

இந்த திருக்கோயிலில் தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், கார்த்திகைத் திருவிழா என அனைத்தும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கந்த சஷ்டி கவசம் பாடல் அரங்கேறிய இடமாக இந்த திருக்கோயில் விளங்கி வருகிறது. முருக பக்தி ஒருவர் கந்த சஷ்டி கவச பாடலை இந்த கோயிலில் தான் முதலில் அரங்கேற்றம் செய்துள்ளார் என கூறப்படுகிறது.

சென்னிமலை சித்தர்களில் பின்னாக்கு சித்தர் என்பவரின் உடல் இந்த இடத்தில் தான் சமாதி செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இவர் 18 சித்தர்களில் ஒருவராக கூறப்படுகிறார்.

கோயில் அமைவிடம்

 

ஈரோடு மாவட்டத்தில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் இந்த சென்னிமலை தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner