தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mexican Masala Pasta : யம்மி அண்ட் டேஸ்டி; ஒன் பாட் மெக்சிகன் சீஸி-சீஸி ஜூஸி-ஜூஸி மசாலா பாஸ்தா!

Mexican Masala Pasta : யம்மி அண்ட் டேஸ்டி; ஒன் பாட் மெக்சிகன் சீஸி-சீஸி ஜூஸி-ஜூஸி மசாலா பாஸ்தா!

Priyadarshini R HT Tamil
Sep 09, 2023 10:00 AM IST

Mexican Masala Pasta : மெக்சிகன் மசாலா பாஸ்தா செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீஸ் கலந்து செய்யப்பட்ட பாஸ்தாவை உண்டு மகிழ்வார்கள்

மெக்சிகன் மசாலா பாஸ்தா செய்வது எப்படி?
மெக்சிகன் மசாலா பாஸ்தா செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

பூண்டு – 1 ஸ்பூன் (துருவியது)

பச்சை குடை மிளகாய் – அரை

மஞ்சள் குடை மிளகாய் – அரை

சிவப்பு குடை மிளகாய் – அரை

இவையனைத்தையும் சதுர வடிவில் நறுக்கிக்கொள்ள வேண்டும்

வெங்காயம் – 1 (சதுர வடிவில் நறுக்கியது)

மிளகாய் தூள் – அரை ஸ்பூன்

ரெட் சில்லி ப்ளேக்ஸ் – அரை ஸ்பூன்

மிளகுத்தூள் – கால் ஸ்பூன்

ஓரிகானோ – 1 டேபிள் ஸ்பூன்

சீரகத்தூள் – 1 ஸ்பூன்

பாஸ்தா – 1 கப்

பால் – 2 கப்

தண்ணீர் – 1 கப்

உப்பு – தேவையான அளவு

வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

சீஸ் – 3 ஸ்லைஸ்

சமைத்த ராஜ்மா – 1 கப்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும்.

சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், சிவப்பு, பச்சை, மஞ்சள் குடை மிளகாய் என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் மிளகாய் தூள், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ், மிளகுத்தூள், ஓரிகானோ, சீரகத்தூள் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் ஒரு கப் பாஸ்தா, இரண்டு கப் பால், தண்ணீர் ஒரு கப் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

உப்பு மற்றும் வெண்ணெய் தேவையான அளவு சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

இவையனைத்து நன்றாக வெந்து பாஸ்தா தயாராகிவரும் வேளையில் மூன்று சீஸ் துண்டுகளையும் பாஸ்தா மேல் பரப்பி வைக்க வேண்டும்.

நீங்கள் சமைக்க துவங்கும் முன்னே ஒரு அகலமான கடாயை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் சீஸை பரப்பி வைக்க முடியும். அப்போதுதான் சீஸ் பாஸ்தாவின் அனைத்து பக்கங்களிலும் இறங்கி நல்ல சீஸி-சீஸி ஜூஸி-ஜூஸி பாஸ்தா கிடைக்கும்.

கடைசியாக வேக வைத்த ராஜ்மாவை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். இப்போது சுவையான மசாலா பாஸ்தா சாப்பிட தயாராகிவிட்டது.

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுக்க மகிழ்ச்சியாக உண்பார்கள். மேலும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவதாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்