தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Menstrual Problems : மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு; பிசிஓடி, பிசிஓஎஸ்க்கு மருந்து! இந்த உருண்டை மட்டும் தினமும் போதும்

Menstrual Problems : மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு; பிசிஓடி, பிசிஓஎஸ்க்கு மருந்து! இந்த உருண்டை மட்டும் தினமும் போதும்

Priyadarshini R HT Tamil
May 26, 2024 08:00 AM IST

Menstrual Problems : மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கும். பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்னைகளுக்கும் மருந்தாகும். நீங்கள் உணவில் தினமும் இந்த உருண்டை மட்டும் சேர்த்தால் போதும். கருப்பு உளுந்து உருண்டையை சாப்பிட்டு பலன்பெறுங்கள்.

Menstrual Problems : மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு; பிசிஓடி, பிசிஓஎஸ்க்கு மருந்து! இந்த உருண்டை மட்டும் தினமும் போதும்
Menstrual Problems : மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு; பிசிஓடி, பிசிஓஎஸ்க்கு மருந்து! இந்த உருண்டை மட்டும் தினமும் போதும்

ட்ரெண்டிங் செய்திகள்

மேலும் பெண்கள் இடுப்பு வலி, கை-கால் வலி பிரச்னைகளால் அவதிப்படுவார்கள். போதிய உதிரப்போக்கு இல்லாமை அல்லது அதிக உதிரப்போக்கு என உபாதைகளால் பெண்கள அவதிப்படுவார்கள். 

அவர்களின் கருப்பை தொடர்பான பிசிஓடி, பிசிஓஎஸ் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக, கருப்பைக்கு வலுசேர்க்கும் நீங்கள் வீட்டில் செய்யும் இந்த உருண்டை இருக்கும். மாதத்தில் 5 நாட்கள் மட்டும் இந்த உருண்டையை சாப்பிடவேண்டும்.

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து உடைத்து – ஒரு கப்

(வெள்ளை உளுந்து பயன்படுத்தக்கூடாது. கருப்பு உளுந்தில், வெள்ளை உளுந்தைவிட அதிகப்படியான நன்மைகள் உள்ளது. மாதவிடாய், கருப்பை, உதிரப்போக்கு தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும், கருப்பு உளுந்துதான் சிறந்தது)

பொட்டுக்கடலை – அரை கப்

நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் அல்லது கருப்பட்டி – ஒரு கப்

(வெல்லம் மற்றும் கருப்பட்டியை உடைத்து சேர்க்கவேண்டும். வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரையை தவிர்த்தல் நல்லதுதான். உங்களிடம் கருப்பட்டி இல்லாவிட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம். கருப்பட்டிதான் கருப்பையில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி சுத்தம் செய்யும். உங்களுக்கு தேவைப்பட்டால் அதிக இனிப்பு சேர்த்துக்கொள்ளலாம்)

நல்லெண்ணெய் – ஒரு கப்

நல்லெண்ணெய்க்கு பதில் நெய்யும் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது நல்லெண்ணெய் மற்றும் நெய்யும் சேர்த்துக்கொள்ளலாம். நல்லெண்ணெய் சேர்ப்பதுதான் நல்லது. பூப்பெய்திய பெண்களுக்கு நல்லெண்ணெயும், நாட்டுக்கோழி முட்டையும் பச்சையாக சாப்பிடக் கொடுப்பார்கள். எனவே நல்லெண்ணெய் சேர்ப்பது நல்லது. இது இடுப்புக்கு தெம்பு கொடுக்கும். முறையற்ற மாதவிடாயை குணப்படுத்தும்.

ஏலக்காய்ப்பொடி – ஒரு சிட்டிகை

செய்முறை

முதலில் கருப்பு உளுந்தை நன்றாக அலசி வெயிலில் வைத்து காய வைக்கவேண்டும். பின்னர் அதை நன்றாக வறுத்து எடுக்கவேண்டும். சிவந்து வாசம் வரும் வரை வறுக்கவேண்டும். உளுந்து வறுபடும்போது வீடு முழுவதும் நல்ல வாசனை பரவும்.

பின்னர் அதில் பொட்டுக்கடலையை சேர்த்துவிட்டு உடனே அடுப்பை அணைத்துவிடவேண்டும். அந்த சூட்டிலே பொட்டுக்கடலை வறுபட்டால் போதும்.

வறுத்தவற்றை ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவேண்டும். நன்றாக பொடித்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதில் கருப்பட்டியை சேர்த்து பொடிக்கவேண்டும்.

அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி, நல்லெண்ணெயை சுடவைத்து, அந்த மாவில் கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து கரண்டியில் கலந்துவிடவேண்டும். கைபெருக்கும் சூடு வந்தவுடன் அதை கைகளில் உருட்டி, நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவேண்டும்.

அனைத்தை மாவையும் உருட்டி, வெளியிலே ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம். ஈரம் இல்லாத பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

மாதவிடாய் நேரத்தில் இதை பெண்கள் எடுத்துக்கொள்வது நல்லது. இது மாதவிடாய் பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்கும். மாதவிடாய் தொந்தரவு உள்ள பெண்கள் உங்களின் மாதவிடாய்க்கு 10 நாட்கள் முன்னரே சாப்பிடலாம்.

பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்னைகள் உள்ள பெண்கள் தினமும் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு கட்டாயம் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்