Pre-eclampsia : பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்தக்கொதிப்பு.. அதன் அறிகுறிகள் என்ன? செய்ய வேண்டியது இதுதான்!
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்தக்கொதிப்பை (Pre-eclampsia)ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பாதுகாப்பான தாய்மையை உறுதிபடுத்தலாம்.

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்தக்கொதிப்பை (Pre-eclampsia)ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பாதுகாப்பான தாய்மையை உறுதிபடுத்தலாம்.
கர்ப்ப காலத்தில் பொதுவாக 20 வாரங்களுக்குப் பிறகு இரத்தஅழுத்தம் 140/90 க்கு அதிகமாக இருந்தாலோ,சிறுநீரில் புரதத்தின் அளவு 300 மிகி/நாள்-அதிகமாக இருந்தாலோ,அதை Pre-eclampsia என அழைப்பர்.
இள வயதில் இரத்தக்கொதிப்பு
அதை ஆரம்பத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் தாய்-சேய் நலனை உறுதிபடுத்த முடியும். இந்தியாவில் 7.1% கருவுற்ற பெண்களின் இறப்பிற்கு, பேறு காலத்தில் ஏற்படும் இரத்தக்கொதிப்பு காரணமாக உள்ளது.
பேறு காலத்தில் ஏற்படும் இரத்தக்கொதிப்பு காரணமாக சேய்க்கு-இள வயதில் இரத்தக்கொதிப்பு, வளர்சிதை மாற்ற பாதிப்பு(Metabolic syndrome),இருதயப் பிரச்சனை,இரத்தத்தில் கொழுப்பு பிரச்சனை(Dyslipidemia),மூளை பாதிப்பு(Stroke)-பாதிப்புகள் பிற்காலத்தில் ஏற்படுவதோடு,சுகாதாரத்துறைக்கும் சிகிச்சை அளிக்க, அது பெரும் சுமையை ஏற்படுத்தும்.
Pre-eclampsia பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கும்,இருதய செயலிழப்பு(Heart Failure)ஏற்படும் வாய்ப்பு 4 மடங்கு அதிகமாகவும், இருதய இரத்தக்குழாய்களில் பாதிப்பும்,மூளை பாதிப்பும்(Stroke),இருதயப் பிரச்சனைகளால் முன்கூட்டிய உயிரிழப்பு(Cardiovascular Mortality)ஏற்படுவது 2 மடங்கு அதிகம் இருப்பதும் ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் போதிய முக்கியத்துவம் இல்லை
இப்படி இருந்தும்,பேறு காலத்தில் இரத்தக்கொதிப்பால்(Pre-eclampsia)பாதிக்கப்பட்ட பெண்களுக்கு,பிரசவம் முடிந்தவுடன்,இருதயப்பிரச்சனைகள் ஏற்படுவதை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் ஆய்வுகளுக்கு இந்தியாவில் போதிய முக்கியத்துவம் இல்லை.!
இந்தியாவில் 25% பிரசவங்கள் வழக்கமாக நடைபெறாமல் ஏதோ ஒரு பிரச்சனையை சந்தித்து வருவது ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் National Family Health Survey-NFHS-5 ஆய்வுப்படி,Perinatal mortality rate-1000 பிரசவங்களில் 32 எனவும்,பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம்(Neonatal Mortality rate-1000 உயிருடன் பிறக்கும் குழந்தைகளில்,25 எனவும் அதிகமாக உள்ளது.
Pre-eclampsia அறிகுறிகள்
முகம்,கை,கால்களில் அதிக வீக்கம்,
தாங்க முடியாத தலைவலி,
கண் பார்வை கோளாறுகள்,
மேல் வயிற்று வலி,
மூச்சுத் திணறல்... போன்றவை.
2 மற்றும் 3ஆம் Trimester களில் - இரத்தஅழுத்த,சிறுநீர் பரிசோதனைகளில் Pre-eclampsia பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய முடியும்.
வண்ண டாப்லர் அல்ட்ராசௌண்ட்(Colour Doppler Ultrasound)பரிசோதனை பேறுகால இரத்தக்கொதிப்பு பிரச்சனையை ஆரம்பத்தில் கண்டறிய உதவும் என்பதால் அரசு அதில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.(increased pulsatility, Resistive indices-தெளிவாக பார்க்க முடியும்.)
தமிழகத்தில் சென்னையில் அக்டோபர்-டிசம்பர் 2018ல், 200 பேருக்கு பிரசவிப்பதற்கு முன்னர் (Antenatal mothers)செய்யப்பட்ட ஆய்வில் 90 பேருக்கு உயர் இரத்தஅழுத்தம் இருந்தது தெரியவந்துள்ளது.
அவர்களில் 45%- முதல் பிரசவம்(Primi),40.1% பேர் குறைந்த சமூக,பொருளாதார வகுப்பைச் சேர்ந்தவர்கள்,49.8% பேரின் BMI-Body Mass Index-26-30 என அதிகமாக இருந்துள்ளது.(ரெஷ்மி விஸ்வாம்பரன் அவர்கள் செய்த ஆய்வு.)
2020ல் வெளிவந்த ஆய்வில்
சேலம்,இரங்கஇராஜன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2020ல் வெளிவந்த ஆய்வில் பின்வரும் விபரங்கள் தெரியவந்துள்ளது.
பேறு காலத்தில் இரத்தக்கொதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள்-10.4%.(19,383 பேர் கலந்து கொண்ட ஆய்வில்,2028 பேருக்கு பாதிப்பு இருந்தது.)இதில் Pre-eclampsia வால் பாதிக்கப்பட்டவர்கள்-32.6%. முதல் பிரசவம்-54%, 18-22வயதினர் மத்தியில் பாதிப்பு அதிகம் இருந்தது.
Pre-eclampsia வால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு அதிக இரத்தப்போக்கு பாதிப்பு 15% பேருக்கு இருந்தது.
தாய்மார்களுக்கு HELLP syndrome(Haemolysis,Elevated Liver Enzymes,Low Platelet)பாதிப்பும் இருந்தது.
சேய்- 29% பேர் குறைப்பிரசவத்தில்(Prematurity) பிறந்தவர்கள்.
மேற்கண்ட ஆய்வுகள் சமூக,பொருளாதாரத் தளங்களில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே தாய்/சேய் உயிரிழப்புகள்/பாதிப்புகளை குறைக்க முடியும் என வலியுறுத்துகின்றன.
The Indian Radiological and Imaging Association(IRIA)-"Samrakshan" திட்டம் மூலம்,இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்,அடுத்த 10 ஆண்டுகளில் Pre-eclampsia பாதிப்பை தற்போதுள்ள 8-10%ல் இருந்து 3% ஆக குறைக்கவும்,பிறக்கும் குழந்தையின் எடை குறைப்பாட்டை 25-30%ல் இருந்து 10%ஆக குறைக்கவும் திட்டங்கள் தீட்டினாலும்,அரசு/மக்களின் விழிப்புணர்வு,ஒத்துழைப்பின்றி இவை வெற்றிபெற முடியாது. தகுந்த தலைமையும் இலக்கை எட்ட முக்கியமானது.
பேறுகால இரத்தக்கொதிப்பால் தாய்/சேய் பாதிக்கப்படுவதை நிறுத்த நடைமுறையில் சிறப்பான திட்டங்கள் தேவை என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
நன்றி : மரு.வீ.புகழேந்தி.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்