சுண்டி இழுக்கும் சுவையில் மாங்காய் ஊறுகாய்.. ஒரு தடவ சாப்பிட்டா.. திரும்ப திரும்ப சாப்பிட தோன்றும்.. சுவை சும்மா அள்ளும்
மோர் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், என அனைத்து வெரைட்டி ரைஸ்க்கும் சேர்த்து சாப்பிட அத்தனை பொருத்தமாக இருக்கும். அட்டகாசமாக இருக்கும் இந்த மாங்காய் ஊறுகாயை எளிமையாக மிகவும் சுவையாக வீட்டிலேயே எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.
மாங்காய் என்றாலே பலருக்கும் நாக்கில் நீர் சுரக்கும். மாங்காயை பச்சையாக உப்பு மிளகாய் தொட்டு சாப்பிட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். சிலர் குழம்பு, பச்சடி, ஜாம், மிட்டாய் என பல வகையில் சமைத்து உண்கின்றனர். ஆனாலும் பலருக்கும் மாங்காய் ஊறுகாய் என்றாலே கூடுதல் மகிழ்ச்சி தான். மாங்காய் ஊறுகாய் வீட்டில் இருந்து விட்டால் சாப்பாடு தானாகவே இறங்கும். வேறு எதுவும் தேவையில்லை. ஒரு தடவை மாங்காய் ஊறுகாயை செய்து வைத்து விட்டாலே மூன்று முதல் நான்கு மாதத்திற்கு வேறு எந்த சைடிஷ் தேவையே இல்லை. சிலர் ஊறுகாயையே சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு விடுவார்கள். அந்த மாதிரி ஒரு ஐட்டம் தான் மாங்காய் ஊறுகாய். மோர் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், என அனைத்து வெரைட்டி ரைஸ்க்கும் சேர்த்து சாப்பிட அத்தனை பொருத்தமாக இருக்கும். அட்டகாசமாக இருக்கும் இந்த மாங்காய் ஊறுகாயை எளிமையாக மிகவும் சுவையாக வீட்டிலேயே எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மாங்காய் 2
மிளகாய் தூள் - 5 ஸ்பூன்
கடுகு 2 ஸ்பூன்
வெந்தயம் - 4 டீ ஸ்பூன்
பெருங்காயம் சிறிதளவு
நல்லெண்ணெய்-150 மி.லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் மாங்காயை நன்றாக கழுவி மேல் பகுதியை துணியால் துடைக்க வேண்டும்.
மாங்காயை துடைத்த பின் அதை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
இந்த மாங்காயை 7 டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக பொன் நிறம் வரும் வரை வறுக்க வேண்டும்.
வெந்தயம் நன்றாக சிவக்கும் வரை வறுக்க வேண்டும். வெந்தயம் பொரிந்து வர வேண்டும். வெந்தயம் நன்றாக ஆறிய பிறகு அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் செய்ய வேண்டும்.
பின்னர் உப்பில் ஊறி மாங்காய் மீது இரண்டு ஸ்பூன் பெருங்காய தூளை சேர்க்க வேண்டும். மேலும் பவுடர் செய்து வைத்த வெந்தயப் பொடியையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைக்க வேண்டும். மேலும் 150 மி.லிட்டர் நல்ணெண்ணெய்யை விட்டு மிதமாக சூடாக்க வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் கடுகை சேர்த்து நன்றாக பொரிய விட வேண்டும். கடுகு நன்றாக பொரிந்த பின் அடுப்பை அணைத்து விட்டு 4 ஸ்பூன் மிளகாய் தூளை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இதை ஏற்கனவே நறுக்கி உப்பில் ஊற வைத்த மாங்காய் மீது சூடாக இருக்கும் நல்லெண்ணெய் மிளகாய் தூள் கலவையை சேர்க்க வேண்டும். இதை நன்றாக கிளறி விட வேண்டும்.
குறிப்பு :
உப்பு காரம் அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டி குறைத்து கொள்ளலாம். காற்றுப்புகாத ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு வைத்தால் சீக்கிரம் கெட்டு போகாது.. எப்போது பயன்படுத்தினாலும் உலர்ந்த ஸ்பூன் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். மாங்காய் ஊறுகாய் வீட்டில் இருந்து விட்டால் போதும். சாப்பாட்டுக்கு வேறு எதுவும் தேவையில்லை. அப்பறம் என்ன மாங்காய் கிடைத்தால் உடனே ஊறுகாய் செய்து வீட்டில் எல்லோரையும் அசத்துங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்