தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Manage Negative Thoughts : எதிர்மறை சிந்தனைகளை போக்கி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி? – அறிவுரை!

Manage Negative Thoughts : எதிர்மறை சிந்தனைகளை போக்கி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி? – அறிவுரை!

Priyadarshini R HT Tamil
Sep 16, 2023 12:00 PM IST

நமக்கு வேலையில்லாவிட்டால், நாம் அமர்ந்து கடந்த காலங்கள், அப்போது ஏற்பட்ட வலிகள் என எண்ணிக்கொண்டிருப்போம் அல்லது எதிர்காலம் என்னவாகுமோ என்று எண்ணிக்கொண்டிருப்போம்.

எதிர்மறை சிந்தனைகளை போக்கி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி? – அறிவுரை!
எதிர்மறை சிந்தனைகளை போக்கி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி? – அறிவுரை!

ட்ரெண்டிங் செய்திகள்

நீங்கள் இவற்றில் அதிக கவனம் செலுத்தினீர்கள் என்றால் உங்களுக்கு சோகம்தான் மிஞ்சும். நீங்கள் நிகழ்கால வாழ்க்கையை வாழ முடியாது. உங்களின் எதிர்மறை சிந்தனைகளை விட்டு ஒழித்தீர்கள் என்றால் மட்டுமே நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். உங்களின் எதிர்மறை சிந்தனைகளை போக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மன நலக்கோளாறு, பயம், பதற்றம் மற்றம் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்னைகளினால், இந்த எதிர்மறைச்சிந்தனைகள் தோன்றுகின்றன. சிலருக்கு தொடர்ந்து ஏன் எதிர்மறை சிந்தனைகள் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்களை புரிந்துகொள்வதற்கு இவற்றையெல்லாம் ஏற்பது முக்கியமாக உள்ளது.

எதிர்மறைச் சிந்தனைகளை கையாள்வது எப்படி?

எதிர்மறைச்சிந்தனைகளை பார்க்கும்போது, நாம் அவற்றை அடையாளம் காண்பது அவசியமாகிறது. அதற்கு உங்களைப்பற்றி விழிப்புணர்வு மற்றும் உங்களுக்குள் நடைபெறும் உரையாடல் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். நீங்கள் எப்படி உங்களை விமர்சிக்கிறீர்கள், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உங்களுக்கு ஏற்படும் அச்சம் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.

நிகழ்காலத்தில் வாழ பழகுதல் மற்றும் நினைவாற்றல்

நிகழ்காலத்தில் வாழ பழகும்போதும், நினைவாற்றலை பழகும்போதும், உங்களின் சிந்தனைகளை எவ்வித தீர்வும் கூறாமல் கண்காணியுங்கள். அது உங்களின் எதிர்மறை எண்ணங்களைப்போக்கி, உங்கள் மனநிலையை மாற்றும்.

அறிவாற்றல் நடத்தை சிகிச்சை

இது ஒரு சிகிச்சை முறை. எதிர்மறை எண்ணங்கள் சார்ந்த உங்கள் சிந்தனைகளை நேர்மறையாக மாற்றும்.

நேர்மறையாக பேசுங்கள்

நீங்கள் உங்களிடம் பேசும்போது நேர்மறையாகவே பேசி பழகுங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பற்றியவற்றை படிப்பது உங்களுக்கு உற்சாகமளிக்கும். நாம் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் மிகவும் அவசியம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

எதெற்கெல்லாம் நன்றி கூற வேண்டும் என்று எழுதுவது

நீங்கள் எழுத்தாளராக இருக்க வேண்டாம். ஆனால், நீங்கள் எதெற்கெல்லாம் நன்றியுடையவர்களாக இருக்கிறீர்கள் என்பதை எழுதுங்கள். அது உங்களை எதிர்மறை சிந்தனைகளில் இருந்து நேர்மறை சிந்தனைக்கு மாற்றும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்பது உடல் பருமனை குறைப்பதற்கு மட்டுமல்ல, உடற்பயிற்சியின்போது எண்டோர்ஃபின்கள் வெளியாகும். அவை இயற்கையிலேயே மனதை இதமாக்குபவை. அவையும் எதிர்மறை சிந்தனைகளை எதிர்த்து போராட தூண்டும்.

சமூகத்தின் ஆதரவு

உங்கள் நண்பர்களுடன் பேசுங்கள். பகிரும்போது, உணர்வு ரீதியான அமையுடன், வேறு ஒரு கோணமும் கிடைக்கும். ஆனால் அவை புரிந்துகொள்ளக்கூடியவை மற்றும் ஆதரவானவையாக இருக்கும்.

எதிர்மறையின் நேரத்தை குறையுங்கள்

நீங்கள் செய்தித்தாள், டிவி என எதைப்பார்த்தாலும் அதிகம் எதிர்மறைச்சிந்தனைகள் மட்டுமே நிறைந்துள்ளன. எனவே எதிர்மறையான செய்திகளை தவிர்த்துவிடுங்கள். உங்களுக்கு எதிர்மறை சிந்தனைகளை வளர்க்கும் ஆபத்தான சூழலை தவிர்த்து விடுங்கள்.

உங்கள் மீது கவனமாக இருத்தல்

உங்களின் குடும்ப உறுப்பினர்களை கவனித்தல், உங்களை கவனிப்பது என நீங்கள் கவனம் செலுத்தினால், நன்றாக இருக்கும். குறிப்பாக நல்ல தூக்கம், சாப்பாடு, உங்களுக்கு பிடித்தது என உங்கள் மீது அக்கறை செலுத்தினாலே நீங்கள் மகிழ்ந்திருக்கலாம்.

லட்சியங்களை வைத்துக்கொள்ளுங்கள்

வேலை அல்லது வாழ்க்கையில் லட்சியம் என்பது கட்டாயம். ஆனால் உண்மையில்லாத எதிர்பார்ப்புகள் தவறு. எனவே நீங்கள் அடையக்கூடிய லட்சியங்களை வைத்துக்கொண்டு அதை அடைந்து உற்சாகத்துடன் இருங்கள்.

உங்கள் பலங்களை மட்டும் சிந்தியுங்கள்

உங்கள் பலங்களை தெரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் எதிர்மறைச்சிந்தனைகள் உள்ளது என்று நீங்கள் எண்ணினால், நீங்கள் செய்த நல்ல விஷயத்தை எண்ணி மகிழ்ந்திருங்கள்.

ஆனால் கட்டுக்கடங்காத எதிர்மறை சிந்தனைகள் உங்களை பாதித்தால், கட்டாயம் மனநல ஆலோசகரை அணுகுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்