தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Madurai Special Chicken Masala : மதுரை ஸ்பெஷல் மசாலா! மல்லி மட்டுமல்ல சிக்கன் கறி மசாலாவும் மணமணக்கும்!

Madurai Special Chicken Masala : மதுரை ஸ்பெஷல் மசாலா! மல்லி மட்டுமல்ல சிக்கன் கறி மசாலாவும் மணமணக்கும்!

Priyadarshini R HT Tamil
May 27, 2024 03:11 PM IST

Madurai Special Chicken Masala : மதுரை ஸ்பெஷல் சிக்கன் கறி மசாலா செய்வது எப்படி? மல்லி மட்டுமல்ல சிக்கன் கறி மசாலாவும் மணமணக்கும் மதுரையில் என்பது தெரியும். அதை சமைக்கவும் தெரிந்துகொள்ளுங்கள்.

Madurai Special Chicken Masala : மதுரை ஸ்பெஷல் மசாலா! மல்லி மட்டுமல்ல சிக்கன் கறி மசாலாவும் மணமணக்கும்!
Madurai Special Chicken Masala : மதுரை ஸ்பெஷல் மசாலா! மல்லி மட்டுமல்ல சிக்கன் கறி மசாலாவும் மணமணக்கும்!

ட்ரெண்டிங் செய்திகள்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

மசாலா செய்ய தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 2

ஏலக்காய் – 1

வெங்காயம் – 4 (நீளவாக்கில் நறுக்கியது)

பச்சை மிளகாய் – 3 கீறியது

இஞ்சி - பூண்டு விழுது – 2 ஸ்பூன்

தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)

மல்லித்தூள் -2 ஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு ஸ்பூன்

தண்ணீர் – 2 கப்

கொத்தமல்லி இலை – கைப்பிடியளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும். இதை 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவேண்டும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவேண்டும். வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

பின்னர் இஞ்சி – பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவேண்டும்.

பின்னர் மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.

இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் அல்லது உங்களுக்கு தேவையான அளவு விசில் விட்டு எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். அதன் மேல் மல்லித்தழைகளை தூவவேண்டும். சூப்பர் சுவையில் மதுரை ஸ்பெஷல் சிக்கன் கறி தயார்.

இதை சூடான சாதம், இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து பரிமாறலாம்.

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மனஅழுத்தத்துக்கு மருந்து

சிக்கனில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலம் உள்ளது. இவையிரண்டும் உடலில் செரோட்டினின் சுரக்க உதவுகிறது. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு வேதிப்பொருள்.

இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் மூளை இயக்கத்துக்கு உதவுகிறது

வைட்டமின் பி12 மற்றும் சோலைன் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்துக்கும் உதவுகிறது. வயோதிகர்களுக்கு நினைவாற்றலை வழங்குகிறது.

சாப்பிடுவதற்கு எளிதானது

சிக்கன் சாப்பிடுவது எளிதானது. கடித்து விழுங்க சிறந்தது. சுவை நிறைந்தது. இதில் அதிக புரதச்சத்து அதிகம் உள்ளது.

சிக்கன் தசையை வலுப்படுத்துகிறது

இதில் உயர்தர புரதச்சத்து உள்ளது. 30 கிராம் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

எலும்பை வலுப்படுத்துகிறது

இதில் உள்ள புரதச்சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

எடை இழக்க உதவுகிறது

புரதச்சத்து நிறைந்தது. அது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது.

சிக்கனை முழுமையாக சமைத்துதான் சாப்பிட வேண்டும். முறையாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவில் இருந்து பரவும் நோய்கள் குணமாகும். 165 டிகிரியில் அதை எப்போதும் சமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது சளி, இருமலை குணப்படுத்த உதவுகிறது. இது சிங்க் மற்றும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்