தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Benefits Of Turmeric Milk : தினமும் இரவில் பாலுடன் மஞ்சள் பொடி கலந்து பருகுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பாருங்கள்!

Benefits of Turmeric Milk : தினமும் இரவில் பாலுடன் மஞ்சள் பொடி கலந்து பருகுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பாருங்கள்!

May 27, 2024 11:19 AM IST Priyadarshini R
May 27, 2024 11:19 AM , IST

  • Benefits of Turmeric Milk : தினமும் இரவில் பாலுடன் மஞ்சள் பொடி கலந்து பருகுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். 

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததுநமது உடலுக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்களின் சேதத்தை போக்குவதற்கு தேவைப்படுகிறது. அவை உடலை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது. அவை செல்கள் இயங்குவதற்கு அவசியம். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது, அது உங்கள் உடலில் நோய் மற்றும் தொற்றுகள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. மஞ்சள் தூளில் குர்குமின் என்ற உட்பொருள் உள்ளது. அதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. பாலும் உடலில் ஆன்டி ஆக்ஸிடன்டை அதிகரிக்கச் செய்கிறது.

(1 / 10)

வீக்கம் மற்றும் மூட்டுவலியை எதிர்த்து பேராடுகிறதுவீக்கம் மற்றும் மூட்டுவலியை எதிர்த்து போராடுவதற்கு குர்குமின் உதவுகிறது. ஆர்த்ரிட்டிஸ் மற்றும் அதேபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது நன்மையளிக்கிறது. பால், எலும்பை வலுப்படுத்த உதவுகிறது. எலும்புகளில் ஏற்படும் வலியை குறைப்பதற்கு மட்டுமல்ல, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் மஞ்சள்தூள் கலந்த பால் உதவுகிறது.

(2 / 10)

ரத்தத்தை சுத்திகரிக்கிறதுமஞ்சள் தூள் கலந்த பால் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. இது ரத்த நாளங்கள் மற்றும் நிணநீர் மண்டலத்தை சுத்திகரிக்கிறது. நச்சுக்களிடம் இருந்து விலக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.செரிமானத்தை அதிகரிக்கிறதுமஞ்சள் தூள் பாலில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது பல்வேறு செரிமான கோளாறுகளையும் சரிசெய்கிறது. வாயு, உப்புசம், நெஞ்செரிச்சல், வயிறு தொற்றுகள், அல்சர், வயிற்றுப்போக்கு என வயிற்றில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை மஞ்சள் தூள் கலந்த பால் பருகுவது குணப்படுத்துகிறது.

(3 / 10)

புற்றுநோயை தடுக்கிறதுமஞ்சள் தூளில் உள்ள குர்குமின், புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது. புற்றுநோய் செல்களை அழிக்கிறது. இது புற்றுநோய் செல்கள் பரவுவதை தடுக்கிறது. டிஎன்ஏ சேதத்தை தடுக்கிறது. புற்றுநோய் முதல் கட்டத்தில் இருந்தால், தினமும் மஞ்சள் தூள் கலந்த பாலை பருகும்போது அது புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது.இனப்பெருக்க ஆரோக்கியத்தை அதிகரிக்கிறதுமஞ்சள் தூள் கலந்த பாலில் உள்ள உட்பொருட்கள் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் வலியை போக்குகிறது. மாதவிடாய் சுழற்சியை சீராக்குகிறது. ஹார்மோன்களின் சீரற்ற தன்மை, எண்டோமெட்ரியோசிஸ், லியூக்கோரா அல்லது ஃபைப்ராய்ட்கள் என அனைத்தையும் போக்குகிறது. இனப்பெருக்க ஆரோக்கியத்தை அதிகரிக்க மஞ்சள் தூள் கலந்த பால் உதவுகிறது.

(4 / 10)

சளி, இருமலுக்கு மருந்து, சுவாச மண்டல பிரச்னைகளை எதிர்க்கிறதுமஞ்சள் தூள் கலந்த பாலில், பாக்டீரியா மற்றும் வைரஸ்க்கு எதிரான குணங்கள் உள்ளன. அது சளி, இருமல், தொண்டை தொற்று ஆகிய அனைத்தையும் எதிர்த்து போராடுகிறது.சுவாச மண்டலம், தொற்றுகள் மற்றும் நோய்கிருமிகளால் பாதிக்கப்படலாம். இந்த கிருமிகளை அகற்ற மஞ்சள் தூள் கலந்த பால் உதவுகிறது. மஞ்சள் தூள் கலந்த பால் நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள் கொண்டது. இது வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஆஸ்துமா, சைனஸ் மற்றும் நுரையீரல் அடைப்புகளை சீர்செய்ய மஞ்சள்தூள் பால் உதவுகிறது.

(5 / 10)

உடல் எடை குறைக்கவும், உறக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறதுஉடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை அகற்றவும், உடல் எடையை குறைக்கவும் மஞ்சள் தூள் கலந்த பால் உதவுகிறது.மஞ்சள் தூள் கலந்த பால் பருகும்போது அது உடலில் டிரிப்டோஃபான் என்ற அமினோ அமிலங்களை அதிகளவில் சுரக்க வைக்கிறது. இது ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கிறது. இது உங்கள் மனதை அமைதிப்படுத்தி, உங்களுக்கு அமைதியைக் கொடுத்து ஆழ்ந்த உறக்கத்துக்கு வழிவகுக்கிறது.

(6 / 10)

இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த சர்க்கரை அளவுமஞ்சள் தூளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.நீங்கள் நீரிழிவு நோயாளிகளாக இருந்தால், மஞ்சள் தூள் பால் உங்களுக்கு கட்டாயம் உதவும். இதில் பட்டைப்பொடியை கலந்து பருகும்போது, அது உங்களின் ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் இதனுடன் நீங்கள் போதிய உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

(7 / 10)

மூளை சீராக இயங்க உதவுகிறதுமஞ்சள் தூள் கலந்த பாலை பருகும்போது, மூளையின் திறனை அது அதிகரிக்கச் செய்கிறது. அது சிறந்த நினைவாற்றலுக்கு வழிவகுக்கிறது.மனஅழுத்ததை போக்குகிறதுகுர்குமினில் மூளை வேதிப்பொருட்களை கட்டுப்படுத்தி, மனநிலை மற்றும் நடத்தையை மாற்றும் திறன் உள்ளது. இது உங்கள் உடலுக்கு தேவையான செரோட்டினின் மற்றும் டோப்பமைன்களை வழங்குகிறது. மஞ்சள்தூள் கலந்த பால் உங்கள் மனஅழுத்தத்தை போக்குகிறது. மூளையின் பாகங்களை மாற்றும் திறன்கொண்டது குர்குமின். மனஅழுத்தத்தை போக்கி, ஃப்ரி ராடிக்கல்களிடம் இருந்து உடலை காக்கிறது.

(8 / 10)

மனநிலையை மாற்றுகிறதுகுர்குமின், வயோதிகர்களின் மனநிலையை மாற்றும் தன்மை கொண்டது. வீக்கத்தை குறைப்பதன் மூலம் கடும் மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. குர்குமின் உடலில் டோப்பமைன் வெளியாகும் அளவை அதிகரிக்கிறது. டோப்பமைன் என்பது ஒரு நியூரோடிரான்ஸ்மிட்டர் உங்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தரக்கூடிய ஹார்மோன் ஆகும்.

(9 / 10)

சரும ஆரோக்கியம்மஞ்சள் தூள் கலந்த பாலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உங்கள் உடலின் உள் ஆரோக்கியத்தை மட்டும் சீராக்காது, சருமத்தையும் பாதுகாக்கிறது. தழும்புகள், வயோதிகம், சரும சேதம், முகப்பருக்கள் மற்றும் சருமத்தில் ஏற்படும் வீக்கம், அலர்ஜி, வறட்சி என அனைத்தையும் போக்குகிறது. உங்கள் சருமத்தை மிருதுவாக்கி, பளபளப்பாக்குகிறது. உங்கள் சருமத்துக்கு இயற்கையான பொலிவைத் தருகிறது. மேலும் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்குகிறது.

(10 / 10)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்