தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Karpuravalli Chutney : எக்கச்சக்க நன்மைகள் இருக்குங்க இதுல.. கற்பூரவல்லி சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Karpuravalli Chutney : எக்கச்சக்க நன்மைகள் இருக்குங்க இதுல.. கற்பூரவல்லி சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Divya Sekar HT Tamil
Jun 20, 2023 11:35 AM IST

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற கற்பூரவல்லி சட்னி எப்படி செய்வது என்பது குறித்து பார்போம்.

கற்பூரவல்லி சட்னி
கற்பூரவல்லி சட்னி

ட்ரெண்டிங் செய்திகள்

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தினமும் கற்பூரவல்லி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், அவர்களின் தொண்டைப்பகுதியில் தங்கி இருக்கும் கிருமிகள் அழியும். மணத்தில் இது கற்பூரத்தை ஒத்திருக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது, கபம் காரணமாக நெஞ்சில் ஏற்படும் இறுக்கத்தைக் குறைக்கிறது.

ஒட்டுமொத்த உடலுக்கும் தேவையான நல்ல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. கற்பூர வல்லி இலையை நசுக்கி சாற்றை அரிப்பு உள்ள பகுதிகளில் தடவும்போது தோல் தொடர்பான பிரச்னைகளையும் போக்குகிறது.குழந்தைகளுக்கு கற்பூரவல்லி இலைச் சாற்றுடன் சிறிது தேன் கலந்து, கொடுத்தால் நெஞ்சுசளி, இருமல் நீங்கும்.

தேவையான பொருட்கள்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

மிளகு சீரகம் - 1 தேக்கரண்டி

கற்பூரவல்லி இலைகள் - 4

கடலை பருப்பு - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 4

கறிவேப்பிலை - சிறிதளவு

கைப்பிடி அளவு தேங்காய் துருவல்

செய்முறை

கற்பூரவல்லி இலைகளை நன்றாக சுத்தப்படுத்தவும். பின்னர் கேஸ்சில் கடாய் வைத்து சிறிது எண்ணொய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு கற்பூரவல்லி இலைகளை அதில் சேர்த்து 5 நிமிடங்கள் வரை வதக்கவும் இலை நன்றாக வதங்கும் வரை வதக்கவும். அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். உங்களுக்கு மஞ்சள் தேவை என்றால் சிறிது போட்டுக்கொள்ளலாம். கலவை ஆறியதும் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும்,

மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின்பு அதில் கற்பூரவல்லி விழுதை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை அணைக்கவும். இப்போது சுவையான கற்பூரவல்லி சட்னி ரெடி. இதனை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். உடலுக்கு மிகவும் நல்ல ரெசிபி. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற மூலிகைத் தாவரம் கற்பூரவல்லி,

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்