தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Potato Fingers: ரொம்ப ஈஸி தான்.. ட்ரை பண்ணி பாருங்க உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ்!

Potato Fingers: ரொம்ப ஈஸி தான்.. ட்ரை பண்ணி பாருங்க உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ்!

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 01, 2023 10:40 AM IST

உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ் ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

 உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ்
உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

பாரம்பரிய உணவுகள் என கூறப்படும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நமது உடல் நிலை மாறிவிட்டது. என்றும் மாறாத ஒரே என்றும் மாறாத ஒரே உணவு எதுவென்றால் அது ஸ்நாக்ஸ் தான். பொதுவாக ஸ்நாக்ஸ் ஐட்டம்ஸ் குழந்தைகளுக்கு பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது.

பலரும் ஸ்நாக்ஸ் ஐட்டங்களை வெளியே வாங்கி தங்களது குழந்தைகளுக்கு கொடுக்கும் சார். வீட்டில் செய்து கொடுத்தால் அது மிகவும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். அப்படி நம் பார்க்கின்ற ஒரு சத்தான ஸ்நாக்ஸ் ஐட்டம் தான் உருளைக்கிழங்கு பிங்கர்ஸ். இந்த ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

 

  • 4 உருளைக்கிழங்கு
  • ஒரு கப் ரவா
  • 4 பச்சை மிளகாய்
  • 2 வெங்காயம்
  • தேவையான அளவு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி
  • தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய்

உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ் செய்முறை

 

  • முதலில் பச்சை மிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை வெங்காயமாகிவிற்றை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
  • அதன் பின்னர் சளித்து தயாராக வைத்திருக்கும் ரவாவை கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் கொட்டி கிளற தொடங்க வேண்டும்.
  • கட்டியாக மாறாத அளவிற்கு சரியான முறையில் அதனை கிளறி விட வேண்டும். ஒரு நிமிடம் மூடி வைத்துவிட்டு அதன் பின்னர் அந்த கலவையை எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • உருளைக்கிழங்கு வேக வைத்து தோலை உரித்து விட்டு மசித்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதற்குப் பிறகு அந்த மாவு கலவை மற்றும் மசித்து வைத்திருக்கக்கூடிய உருளைக்கிழங்கு இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • இந்த கலவையோடு வெட்டி வைத்திருக்கக்கூடிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த கலவையை 10 நிமிடம் மூடி வைத்து, அதன் பின்னர் விரல்கள் அளவிற்கு இதனை அழகாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதனை காய விட வேண்டும். எண்ணெய் சூடானதும் தயாராக வைத்திருக்கக்கூடிய உருளைக்கிழங்கு பிங்கர்ஸ்களை அதில் போட்டு பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும்.
  • அவ்வளவுதான் சுவையான சூப்பரான உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ் ஸ்நாக்ஸ் ரெடி. இதனோடு தக்காளி சட்னி தேங்காய் சட்னி உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் சுவை அதிகமாகும்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்