Ladies Finger Karaboondhi Fry : வித்யாசமான வெண்டைக்காய், காரா பூந்தி வறுவல்! ஸ்னாக்ஸ், சைட்டிஷ் இரண்டுக்கும் ஏற்றது!
Ladies Finger Karaboondhi Fry : வித்யாசமான வெண்டைக்காய், காரா பூந்தி வறுவல். ஸ்னாக்ஸ் மற்றும் சைட்டிஷ் இரண்டுக்கும் ஏற்றது.
பொதுவாக வெண்டைக்காயை சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும் என்று நமது பெற்றோர்கள் அறிவுறுத்துவார்கள். வெண்டைக்காய் நமது கணிதத்திறனை மேம்படுத்தக்கூடிய காய்கறிகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
வேர்க்கடலை – 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
வெண்டைக்காய் – கால் கிலோ
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
காரா பூந்தி – ஒரு கப்
கொப்பரை தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, சீரகம் சேர்த்து வெடித்தவுடன், வேர்க்கடலை சேர்த்து சிவக்க வறுக்கவேண்டும். வேர்க்கடலை வறுபட்டவுடன், நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்கவேண்டும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன், பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கவேண்டும்.
அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதங்கியவுடன், காரா பூந்தியை சேர்க்கவேண்டும்.
அனைத்தையும் நன்றாக வதக்கி எடுத்தால் சூப்பர் சுவையில் வித்யாசமான வெண்டைக்காய் – காராபூந்தி வறுவல் தயார்.
இது சாதத்துக்கு சூப்பரான ஒரு சைட்டிஷ் என்றாலும், தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள சுவை அள்ளும்.
இது அனைவருக்கும் பிடித்த ஒரு சைட்டிஷ் என்றாலும், குழந்தைகள் விரும்புவார்கள். அவர்கள் இதை ஒரு ஸ்னாக்ஸாகவே சாப்பிட்டு மகிழ்வார்கள்.
ஒருமுறை ருசித்தால், மீண்டும், மீண்டும் சாப்பிட நினைப்பார்கள். வித்யாசமான சுவை நிறைந்ததாக இருக்கும்.
வெண்டைக்காயை நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. வெண்டைக்காயின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
வெண்டைக்காயின் நன்மைகள்
வெண்டைக்காய் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. இரண்டு வெண்டைக்காய்களை நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவிட்டு, அடுத்த நாள் காலையில் வடிகட்டி பருகினால், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது. உடலில் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. அனீமியாவைத் தடுக்கிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது. குடல் புற்றுநோயைத் தடுக்கிறது. கர்ப்ப காலத்துக்கு ஏற்றது வெண்டைக்காய். வெண்டைக்காயில் பல்வேறு சைட்டிஷ்கள் செய்து சாப்பிட முடியும். இந்த வெண்டைக்காய் – காரா பூந்தி பொரியல் அதில் வித்யாசமான ஒன்று. எனவே இதை கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்