தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Side Effects Of Milk : பால் ஒரு சிறந்த உணவுதான், ஆனால் அதை அதிகம் பருகினால் ஏற்படும் பக்கவிளைவுகளை பாருங்கள்!

Side Effects of Milk : பால் ஒரு சிறந்த உணவுதான், ஆனால் அதை அதிகம் பருகினால் ஏற்படும் பக்கவிளைவுகளை பாருங்கள்!

Jun 02, 2024 04:18 PM IST Priyadarshini R
Jun 02, 2024 04:18 PM , IST

  • Side Effects of Milk : அதிக பால் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்.

பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலை பருகவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் உடலுக்கு தேவையான கால்சியச் சத்துக்களை பால் மற்றும் பால் பொருட்கள் உங்களுக்கு கொடுக்கின்றன. ஆனால் நீங்கள் அதகளவில் பால் குடித்தால் அதுவே உங்கள் உடலில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

(1 / 7)

அதிகளவில் பால் பருகும்போது, குறிப்பாக கொழுப்பு நிறைந்த பாலை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது, முகத்தில் பருக்களை அது ஏற்படுத்துகிறது. அதிகம் பால் பருகும்போது, அதிகம் முகப்பருக்கள் வருவதை கண்கூடாக காண முடியும். பாலில் உள்ள சில ஹார்மோன்கள் உங்கள் உடலில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை அதிகம் சுரக்கச் செய்கிறது. இதனால் முகப்பருக்கள் ஏற்படுகிறது.

(2 / 7)

அதிகளவில் பாலை பருகும்போது, அது உங்கள் சிறுநீரகத்தில் கற்கள் உருவாக வழிவகுக்கிறது. பாலில் கால்சியச்சத்துக்கள் அதிகம் உள்ளது. கால்சியம் உங்களின் உடலில் எலும்பு உருவாக மிகவும் தேவையான ஒன்றுதான் என்றாலும், அதிகப்படியான கால்சியம் உங்கள் உடலில் சேரும்போது, அது முறையாக வெளியேற்றப்படாமல் விட்டால் சிறுநீரகத்தில் கற்களாக மாறிவிடுகிறது. இதனால் பாலை அளவாக பருகி, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

(3 / 7)

பாலில் கலோரிகள் அதிகம் உள்ளது. இதை நீங்கள் அதிகளவில் உட்கொள்ளும்போது, அது உங்கள் உடலுக்கு அதிக கலோரிகளை கொண்டுவருகிறது. இதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்கிறது. குறிப்பாக சுவை மற்றும் இனிப்பான பால் பானங்களை நீங்கள் அருந்தும்போது, அது உங்கள் உடலில் கலோரிகளை அதிகரிக்கச் செய்கிறது.

(4 / 7)

அதிகம் கொழுப்பு உள்ள பால், உங்கள் உடலில் கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது. இது உடலில் கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்து, உடலில் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது. அதிக கொழுப்பு நிறைந்த பாலை பருகும்போது, அது உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

(5 / 7)

பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பருகும் ஒரு பானம்தான். குழந்தைகளுக்கு முதல் உணவாகவும், அத்யாவசியமான உணவாகவும் பால் உள்ளது. 40 வயதுக்கு மேல் பெண்கள் பாலை கட்டாயம் பருகவேண்டும். ஏனெனில், அவர்களுக்கு 40 வயதுக்கு பின்னர் ஏற்படும் எலும்பு கோளாறுகளை சரிசெய்ய உதவும்.

(6 / 7)

பொறுப்பு துறப்புஇங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம். எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

(7 / 7)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்