Murungai Keerai Thuvayal : முருங்கைக்கீரை துவையல்; இட்லி, தோசை, வெரைட்டி சாதம் என அனைத்துக்கும் ஏற்றது!
Murungai Keerai Thuvayal : முருங்கைக்கீரை துவையல்; இட்லி, தோசை, வெரைட்டி சாதம் என அனைத்துக்கும் ஏற்ற சைட்டிஷ். இதன் ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
வரமல்லி – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
பூண்டு – 10 பல்
மிளகு - 5
பொட்டுக்கடலை – கால் கப்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் – 2
தேங்காய் துருவல் – ஒரு கப்
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான உப்பு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
கடலை பருப்பு – அரை ஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
கடாயை சூடாக்கி, கடலை பருப்பு, வரமல்லி, சீரகம், மிளகு ஆகியவற்றை ட்ரையாக வறுக்கவேண்டும். அடுத்து பூண்டு மற்றும் பொட்டுக்கடலையை சேர்த்து வறுக்கவேண்டும்.
எண்ணெயை சூடாக்கி, முருங்கைக்கீரையை வதக்கவேண்டும். அனைத்தையும் ஆறவைத்து, மிக்ஸியில் சேர்த்து அரைக்கவேண்டும். அதனுடன் தேங்காய், பச்சை மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைத்தால் முருங்கைக்கீரை சட்னி தயார்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து அந்த துவையலில் சேர்க்க வேண்டும்.
இதை இட்லி, தோசை, சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். தண்ணீர் குறைவாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவேண்டும்.
முருங்கைக்கீரையின் நன்மைகள்
முருங்கைக் கீரை மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் ஒரு கீரை.இதில் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக இரும்புச்சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் அதிகமாக உள்ளன. முருங்கையின் கீரை மட்டுமல்லாமல் அதன் பூவையும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.
அதுமட்டுமல்ல எலும்புகளும், பற்களும் வலிமை பெற உதவும். கண் கோளாறுகள், பித்தம் தொடர்பான நோய்களில் இருந்து நிவாரணம் பெற்றுத் தரக்கூடியது முருங்கைக்கீரை. அதேபோல் முருங்கையின் ஈர்க்கும்கூட மருத்துவ குணம் நிறைந்தது.
வாரத்தில் ஒருநாள் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு நலக்குறைபாடுகள் தீரும். முக்கியமாக வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. பொரியல், கூட்டு மட்டுமல்லாமல் சூப் செய்தும் சாப்பிடலாம்.
அடிக்கடி முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தால் சாதாரண தலைவலியில் தொடங்கி இருமல், சளித்தொல்லைகளில் இருந்து விடுபடலாம். காரணம் இந்தக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. உடல் வலி ஏற்பட்டால் முருங்கைக்கீரையில் ரசம் அல்லது சூப் வைத்துக் குடித்து வந்தாலே நிவாரணம் கிடைக்கும்.
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. முக்கியமாக தாய்ப்பால் ஊறுவதற்கு முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தாலே போதும்.
குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்க முருங்கைக்கீரை சமைத்துச் சாப்பிட வேண்டியது அவசியம். மேலும் முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் தாய்மாருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் நன்மை கிடைக்கும்.
வாயுவை உண்டாக்கக்கூடிய உணவுகளை தாய்மார் சாப்பிட்டால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. முக்கியமாக குழந்தைகளின் வயிறு கல் போன்று வீங்கி உப்பிக்கொண்டு மிகுந்த தொல்லையை கொடுக்கும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தும். இது போன்ற நேரங்களில் முருங்கைக்கீரையை சமைத்துச் சாப்பிடுவது பலன் தரும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்