Kovakkai Thokku : மணக்க மணக்க சுவையான கோவக்காய் தொக்கு! மசாலாவுடன் செய்தால் அள்ளி அள்ளி சாப்பிடத் தூண்டும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kovakkai Thokku : மணக்க மணக்க சுவையான கோவக்காய் தொக்கு! மசாலாவுடன் செய்தால் அள்ளி அள்ளி சாப்பிடத் தூண்டும்!

Kovakkai Thokku : மணக்க மணக்க சுவையான கோவக்காய் தொக்கு! மசாலாவுடன் செய்தால் அள்ளி அள்ளி சாப்பிடத் தூண்டும்!

Priyadarshini R HT Tamil
Jun 29, 2024 02:11 PM IST

Kovakkai Thokku : மணக்க மணக்க சுவையான கோவக்காய் தொக்கை மசாலாவுடன் செய்தால் அள்ளி அள்ளி சாப்பிடக்கொண்டே இருக்க தூண்டும்.

Kovakkai Thokku : மணக்க மணக்க சுவையான கோவக்காய் தொக்கு! மசாலாவுடன் செய்தால் அள்ளி அள்ளி சாப்பிடத் தூண்டும்!
Kovakkai Thokku : மணக்க மணக்க சுவையான கோவக்காய் தொக்கு! மசாலாவுடன் செய்தால் அள்ளி அள்ளி சாப்பிடத் தூண்டும்!

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

பூண்டு – 15 பல்

மிளகு – ஒரு ஸ்பூன் (காரம் வேண்டாம் என்றால் குறைத்துவிடலாம்)

சீரகம் – ஒரு ஸ்பூன்

சோம்பு – அரை ஸ்பூன்

தயிர் – கால் கப்

பச்சை மிளகாய் – 1 (தேவைப்பட்டால் அதிகரித்துக்கொள்ளலாம்)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கோவக்காய் – கால் கிலோ (நீளமாக மெல்லியதாக வெட்டிக்கொள்ளவேண்டும்)

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

வர மிளகாய் – 3

உப்பு – தேவையான அளவு

மட்டன் மசாலா – ஒரு ஸ்பூன்

அல்லது

கரம் மசாலா – கால் ஸ்பூன்

அல்லது

கறி மசாலா – ஒரு ஸ்பூன்

செய்முறை

கோவக்காய் தொக்கு செய்வதற்கு முதலில் மசாலாவை அரைத்துக்கொள்ளவேண்டும்.

கறிவேப்பிலை, மல்லித்தழை, பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, தயிர், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் என அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

கோவக்காயை எண்ணெயில் சிறிது நேரம் வதக்கிக்கொள்ளவேண்டும். பச்சை மணம் போகும் வரை வதக்கவேண்டும். தனியாக எடுத்து வைத்துவிடவேண்டும்.

அதே கடாயில் கூடுதலாக எண்ணெய் சேர்த்து, சீரகம், உளுந்து, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை தாளிக்கவேண்டும்.

பின்னர் வரமிளகாயை கிள்ளி சேர்க்கவேண்டும். கறிவேப்பிலை சிறிது சேர்த்துக்கொள்ளவேண்டும்.

இதில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக பச்சை வாசம் போக வேண்டும். பின்னர் எண்ணெயில் வதக்கி வைத்துள்ள கோவக்காயை சேர்த்து இதை நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும்.

மட்டன் அல்லது கரம் மசாலா அல்லது கறி மசாலா சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். நன்றாக சுருண்டு வதங்கி, எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவேண்டும்.

குறிப்பு

இதில வெஜிடபிள் ஸ்டாக் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும்.

மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்ப்பதால் ருசியானது மட்டுமல்ல ஆரோக்கியமான தொக்கும் ஆகும். கறிவேப்பிலை உங்கள் தலைமுடியை வளர்க்கும்.

சோம்பு, பூண்டு இந்த தொக்குக்கு நல்ல ருசியைத்தரும். வேறு எந்த மசாலாவும் சேர்க்க தேவையில்லை.

தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்க்கவேண்டும்.

கோவக்காயின் நன்மைகள்

கோவக்காய் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இது நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. கோவைக்காய் மற்றும் கீரையை சூப்பில் சேர்த்து சாப்பிடலாம்.

இது குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது

சோர்வை நீக்க உதவுகிறது

நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது

உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது

செரிமானத்தை அதிகரிக்கிறது

சிறுநீரக கற்கள் போக உதவும் கோவக்காய்

நோய்களை குணப்படுத்துகிறது

அலர்ஜியை எதிர்த்து போராட உதவுகிறது

கோவக்காய் தொற்றுக்களை குணப்படுத்துகிறது

புற்றுநோயை தடுக்கிறது

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.