தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kovakai Podi Curry : கோவக்காய் பொடி கறி – இப்டி வித்யாசமாக செய்து பாருங்கள் சுவை அள்ளும்!

Kovakai Podi Curry : கோவக்காய் பொடி கறி – இப்டி வித்யாசமாக செய்து பாருங்கள் சுவை அள்ளும்!

Priyadarshini R HT Tamil
Nov 06, 2023 01:00 PM IST

Kovakai Podo Curry : கோவக்காய் பொடி கறியை இப்டி வித்யாசமாக செய்து பாருங்கள். சுவை அள்ளும்.

Kovakai Podo Curry : கோவக்காய் பொடி கறி – இப்டி வித்யாசமாக செய்து பாருங்கள் சுவை அள்ளும்!
Kovakai Podo Curry : கோவக்காய் பொடி கறி – இப்டி வித்யாசமாக செய்து பாருங்கள் சுவை அள்ளும்!

ட்ரெண்டிங் செய்திகள்

கடுகு – அரை ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – முக்கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

பொடி செய்ய தேவையான பொருட்கள்

நெய் – ஒரு ஸ்பூன்

வர கொத்தமல்லி – 3 டேபிள் ஸ்பூன்

கடலை – 3 டேபிள் ஸ்பூன்

சிவப்பு மிளகாய் – 5

கறிவேப்பிலை – 1 கொத்து

தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

(முதலில் ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, வர கொத்தமல்லியை சேர்த்து சிறிது நேரம் வறுத்துவிட்டு, கடலை, மிளகாய், கறிவேப்பிலை என அனைத்தையும், பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். கரிந்து விடாமல் மிதமான தீயில் வைத்து வறுத்துக்கொள்ள வேண்டும். கடைசியாக தேங்காய் சேர்த்து வறுத்துவிட்டு, பின்னர் அதை ஆறவைத்து காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து கொர கொரவென்று பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்)

செய்முறை

எந்த தேங்காய் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். ஃபிரஷ் தேங்காய் அல்லது டெசிகேடட் என்று எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். கடலைக்கு பதில் கடலை பருப்பையும் வறுத்துக்கொள்ளலாம் அல்லது பொட்டுக்கடலையும் சேர்த்துக்கொள்ளலாம். வரமிளகாய்க்கு பதில் பச்சை மிளகாயையும் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது கஷ்மீரி மிளகாயையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு கடாயில், எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வட்ட வட்டமாக வெட்டிய கோவக்காயை சேர்த்து வதக்கவேண்டும். (சோவக்காயை நீள வாக்ககிலும் வெட்டிக்கொள்ளலாம்)

அதில் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும். மூடி வைத்து சில நிமிடங்கள் வதக்கவேண்டும். திறந்து அவ்வப்போது கிளறிவிட்டுக்கொள்ள வேண்டும்.

இப்போது பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து வதக்க வேண்டும். நீங்கள் பொடியயை கொர கொரப்பாகவும் அரைத்துக்கொள்ளலாம் அல்லது மையாகவும் அரைத்துக்கொள்ளலாம். அனைத்து பொடியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். குறைவானது முதல் மிதமான தீயில் அடுப்பை வைத்து தொடர்ந்து கிளறிவிட்டுக்கொண்டேயிருங்கள்.

சுவையான கோவக்காய் பொடி கறி சாப்பிட தயாராகிவிட்டது. இதை நீங்கள் சாம்பார், ரசம், தயிர் என எந்த சாதத்துடன் வேண்டுமானாலும் பரிமாறிக்கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்