தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kalyana Sambar : வறுத்து அரச்ச மசாலா சேர்த்து செய்யும் கல்யாண விருந்து சாம்பார் ரெசிபி!

Kalyana Sambar : வறுத்து அரச்ச மசாலா சேர்த்து செய்யும் கல்யாண விருந்து சாம்பார் ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Aug 21, 2023 11:08 AM IST

Kalyana Sambar : கல்யாண வீடுகளில் பரிமாறும் சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

கல்யாண விருந்து சாம்பார் செய்வது எப்படி?
கல்யாண விருந்து சாம்பார் செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

எண்ணெய் – 1 ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்

கட்டி பெருங்காயம் – 1

சீரகம் – அரை ஸ்பூன்

பூண்டு – 5 பல்

சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பச்சை மிளகாய் – 1

தக்காளி – 1 (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

முருங்கக்காய் – 2

கத்தரிக்காய் – 2

கேரட் – 1

குழம்பு மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

புளி – (நெல்லிக்காய் அளவு ஊறவைத்து கரைத்து வடிகட்டியது)

மாங்காய் – சிறிதளவு

கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

வர கொத்தமல்லி – 1 ஸ்பூன்

கடலை பருப்பு – 1 ஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்

தேங்காய் – 2 டேபின் ஸ்பூன் (துருவியது)

சீரகம் – கால் ஸ்பூன்

(கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும், மிளகாய், மல்லி, சீரகம், தேங்காய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

ஆறவைத்து பின்னர் மிக்ஸியில் சேர்த்து அரைத்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்)

செய்முறை

பருப்பை குக்கரில் வைத்து அல்லது நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

நன்றாக வதங்கியது, முருங்கை, கத்தரி, கேரட் ஆகிய காய்கறிகளை சேர்க்க வேண்டும்.

2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி, தண்ணீர் சேர்த்து காய்கறிகள் வெந்தவுடன், பருப்பு, கரைத்து வைத்த புளி சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.

மாங்காயும், அரைத்து வைத்த மசாலாவையும் இறுதியாக சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான கல்யாண விருந்து சாம்பார் கிடைக்கும்.

இதை சூடான சாதத்துடன் சாப்பிட சுவை அள்ளும்.

WhatsApp channel

டாபிக்ஸ்