Kadi Joke: ‘நீ ஒரு சயின்டிஸ்ட்னு நிரூபிச்சிட்டல..’ இன்றை கடி ஜோக்ஸ் வருது வருது.. விலகு விலகு!-kadi joke today august 08 mokka jokes tamil comedy sirippu kathaikal - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kadi Joke: ‘நீ ஒரு சயின்டிஸ்ட்னு நிரூபிச்சிட்டல..’ இன்றை கடி ஜோக்ஸ் வருது வருது.. விலகு விலகு!

Kadi Joke: ‘நீ ஒரு சயின்டிஸ்ட்னு நிரூபிச்சிட்டல..’ இன்றை கடி ஜோக்ஸ் வருது வருது.. விலகு விலகு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 08, 2024 09:02 AM IST

Kadi Joke: இன்று உங்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கப்போகும் கடி ஜோக்குகள் இதோ. சிலருக்கு அது மொக்கை ஜோக்காக இருந்தால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல!

Kadi Joke: ‘நீ ஒரு சயின்டிஸ்ட்னு நிரூபிச்சிட்டல..’ இன்றை கடி ஜோக்ஸ் வருது வருது.. விலகு விலகு!
Kadi Joke: ‘நீ ஒரு சயின்டிஸ்ட்னு நிரூபிச்சிட்டல..’ இன்றை கடி ஜோக்ஸ் வருது வருது.. விலகு விலகு!

இது ரொம்ப புதுசு சார்

நோயாளி: ரொம்ப நாள் உயிரோடு இருக்க என்ன செய்யனும் டாக்டர்?

டாக்டர்: சாகாமல் இருக்கணும்ப்பா..

இது தெரியாம போச்சே

அப்பா: பசு மாடு ஏன் பால் தருது சொல்லு?

மகன்: அதால காபி, டீ போட முடியாதுப்பா.. அதான்!

அப்போடு போடு

ஆசிரியர்: கணக்கு பரிட்சைக்கு வந்துட்டு எதுக்குடா டான்ஸ் ஆடிட்டு இருக்க?

மாணவன்: ஸ்டெப்ஸ்க்கு மதிப்பெண் உண்டுனு நீங்க தானே சார் சொன்னீங்க!

‘கடுப்பேத்துறார் மைலார்ட்’

நோயாளி: டாக்டர் ஏன் டாக்டர் பல்லு மட்டும் வலிச்சிட்டே இருக்கு!

டாக்டர்: அதற்கு பெயர் தான் பற்கள்

‘டச்சிங் டச்சிங்’

காதலி: டேய்.. நெஞ்சை தொடுற மாதிரி ஒரு வார்த்தை சொல்லுடா..!

காதலன்: ம்… பனியன்!

‘உன்னை எண்ணிப் பார்க்கையில்..’

நண்பன் 1: ஏண்டா கடுதாசிய மெதுவா எழுதுற..?

நண்பன் 2: இல்லடா.. எங்கம்மாவுக்கு வேகமா படிக்கத் தெரியாதுடா!

‘நீ ஒரு சைன்டிஸ்ட்லே’

அப்பா: தம்பி.. எலிக்கு ஏன் வால் இருக்கு சொல்லு?

மகன்: செத்த பிறகு தூக்கிப் போட அது தானே வசதியா இருக்கும்!

‘என்ன ஒரு வில்லத்தனம்’

ஆசிரியர்: எடை குறைவான வீடு எது சொல்லு?

மாணவன்: தெரியும் சார்.. ‘லைட் ஹவுஸ்’ தானே!

‘உச்சம் பெற்ற ஒருவன்..’

டாக்டர்: எப்படி புட்பாய்சன் ஆச்சு?

நோயாளி: நானும் நண்பனும் சாப்பிட போனோம், நாங்க கேட்டதை சர்வர் தப்பா புரிஞ்சுட்டான்!

டாக்டர்: அப்படி என்ன கேட்டீங்க?

நோயாளி: நாலுநாலு இட்லி வைங்கனு சொன்னோம், நான்கு நாளுக்கு முன்னாடி இட்லியை வெச்சிட்டான்.

‘வாங்குன அடி அப்படி’

பக்கத்துவீட்டுக்காரர் 1: அவரை ஏன், எல்லாரும் இரும்பு மனிதர்னு சொல்றீங்க?

பக்கத்துவீட்டுக்காரர் 2: அவரு, மனைவியிடம் எவ்வளவு அடி வாங்குனாலும் அழவே மாட்டார்!

‘டெபனட்லி.. டெபனட்லி..’

ஆசிரியர்: முட்டை போடாத பறவை பெயரை சொல்லு!

மாணவன்: ம்… ஆண் பறவை சார்!

‘பெரியவர் சிறியவர் அனைவரும் விரும்பும்’

ஆசிரியர்: வெற்றிலை பாக்குடன் சேராத பாக்கு எது?

மாணவன்: ம்.. மைசூர்பாக்கு சார்..!

‘தடுப்பாட்டகாரர் போல’

டாக்டர்: யோவ்.. நான் ஊசி போட வரும் போது, ஏன் இப்படி தடுத்துட்டே இருக்க!

நோயாளி: நீங்க தானே டாக்டர், தடுப்பூசினு சொன்னீங்க!

‘அனுபவம் புதுமை..’

ஆசிரியர்: ஒரு பஸ்ஸில் 10 யானை வந்தது. 9 யானை ஏறிவிட்டது. ஒரு யானை மட்டும் ஏறவில்லை ஏன்?

மாணவன்: அது ஆண் யானை சார்.. வந்தது லேடீஸ் பஸ்!

அடப்பாவமே..

உறவினர்: ஏன் அவரை எல்லாரும் சமையல் அறைக்கு தூக்கிட்டு போறாங்க!

உறவினர் 2: அவர் தான் இந்த ஊர்ல பெரிய பருப்பாம்!

‘எனக்குனே வருவீங்களாடா..’

உறவினர்: அண்ணனுக்கும் தம்பிக்கும் என்ன மாமா வித்தியாசம்?

அப்பா: வயது தான்!

‘ஓஹோ.. இது தான் அதுவா’

ஆசிரியர்: மரமே இல்லாத காடு பெயர் சொல்லுங்க?

மாணவன்: சிம்கார்டு சார்!

‘நீங்க வேற ரகம் சாரே’

ஆசிரியர்: எரும்பு பெருசா? யானை பெருசா?

மாணவன்: பிறந்த தேதி தெரியாமல், அதை சொல்றது கஷ்டம் சார்!

இன்னும் பல கடி ஜோக்குகள் தினமும் பார்க்க, ரசிக்க இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.