Boy Baby Names : ‘அறிவு மற்றும் ஞானம்’ என்ற அர்த்தத்தில் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்கள்!-boy baby names boy baby names meaning knowledge and wisdom - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Boy Baby Names : ‘அறிவு மற்றும் ஞானம்’ என்ற அர்த்தத்தில் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்கள்!

Boy Baby Names : ‘அறிவு மற்றும் ஞானம்’ என்ற அர்த்தத்தில் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்கள்!

Priyadarshini R HT Tamil
Aug 09, 2024 01:25 PM IST

Boy Baby Names : ‘அறிவு மற்றும் ஞானம்’ என்ற அர்த்தத்தில் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்களை தெரிந்துகொண்டு, உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழுங்கள்.

Boy Baby Names : ‘அறிவு மற்றும் ஞானம்’ என்ற அர்த்தத்தில் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்கள்!
Boy Baby Names : ‘அறிவு மற்றும் ஞானம்’ என்ற அர்த்தத்தில் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்கள்!

ஞானம் என்ற பொருள் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்கள்

நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஞானம் அல்லது அறிவு என்ற அர்த்தம் வரும் பெயர்களை தேடிக்கொண்டடிருக்கிறீர்கள் என்றால், இதோ உங்களுக்கான தேர்வுகளை இதிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு 11 ஆண் குழந்தைகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அது ஞானம், அறிவு, அறிவொளி என்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது.

அபிஞ்யான்

அபிஞ்யான், என்றால் உச்சகட்ட அறிவைக் கொண்டவர் என்று பொருள். சிறந்த அறிவாளி என்பது இதற்கு பொருள். இந்தப் பெயர் அறிவு மற்றும் நினைவு என்ற அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஒளிமயமான எதிர்காலத்துக்க ஒரு சிறப்பான தேர்வு என்பது இதன் அர்த்தமாகும்.

அத்விட்

அத்விட், என்றால், எல்லையற்ற அறிவு அல்லது ஞானம் என்று பொருள் தரும். இது எல்லையற்ற அறிவைக்கொண்டவன் என்ற அர்த்ததைக் கொண்டது. வாழ்க்கை முழுவதும், எல்லையில்லா தடையில்லாத கற்றல் மற்றும் புரிதல்கொண்டவர் என்பதை குறிப்பிடுவதாகவும் உள்ளது. இந்தப்பெயரை உங்கள் குழந்தைக்கு சூட்டினால் அவர் புகழ் பெறுவார்.

அனுபூத்

அனுபூத் என்றால், விழிப்புணர்வு மற்றும் புரிந்துகொள்தல் என்று பொருள். இது ஆழ்ந்த அறிவுகொண்டவர் மற்றும் பொறுப்பானவர் என்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது. இது உங்கள் குழந்தை ஞானியாக வர விரும்பினால், அதற்கு இந்தப் பெயர் மிகுந்த பொருத்தமாக இருக்கும். புரிந்துகொள்ளும் நபராகவும் உங்கள் குழந்தைகள் இருப்பார்கள்.

அஸ்வத்

அஸ்வத் என்றால், அறிவின் மரம் என்று பொருள். இந்தப்பெயர், புத்தர் அமர்ந்து ஞானம் பெற்ற போதிமரத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்தப் பெயர், ஆழ்ந்த ஞானத்தையும், ஆன்மீன ரீதியான வளர்ச்சியையும் காட்டுகிறது. எனவே இந்தப் பெயரும் உங்கள் குழந்தைக்கு பொருத்தமான பெயர்தான்.

அதர்வா

அதர்வா, விநாயகரின் பெயர்களுள் ஒன்று, வேதங்கள் அறிந்தவர் என்பது இதற்கு பொருள் ஆகும். இது அறிவு மற்றும் ஞானத்தை காட்டுகிறது. இது உங்கள் குழந்தைகள் அறிவில் சிறந்து விளங்க விரும்பினால், இந்தப்பெயரை சூட்டி மகிழுங்கள்.

டானிஷ்

டானிஷ் என்றால் முழு அறிவும், ஞானமும் உடையவர் என்று பொருள். இதற்கு அறிவாளி என்று அர்த்தம். இது ஞானத்தைக் காட்டுகிறது.

இஷாந்த்

இஷாந்த், என்றால் அறிவு மற்றும் ஞானத்தை தேடுபவர் என்று பொருள். இது வாழ்நாள் முழுவதும் கற்கும் ஆர்வமும், திறமையும் கொண்டவர் என்பதை சுட்டிக்காட்டுவதாகும். உங்கள் குழந்தை அறிவுச்சுடராக வேண்டுமெனில் இந்தப்பெயரை அவருக்கு கட்டாயம் சூட்டுங்கள்.

ரித்விக்

ரித்விக் என்றால், உண்மை அறிவு மற்றும் உண்மை ஞானி என பொருள் தரும். இது பெற்றோர்களுக்கு சிறந்த தேர்வு. தங்கள் குழந்தை அறிவைப் பெற விரும்பினாலோ அல்லது ஆன்மீக ஒளியைப் பெற விரும்பினாலோ இந்தப் பெயரை அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைத்து மகிழலாம்.

தன்வீர்

தன்வீர் என்றால், அநிவொளி, அறிவுச்சுடர் என்று பொருள். இதற்கு பொருள், அறிவை பிரதிபலிப்பவர் என்தாகும். இவர் பிரகாசமான ஆளுமையாக மாறுவார். இந்த பெயரைக் கொண்டவர்கள் ஞானம் மற்றும் அறிவு கொண்டவர்களாக மாறுகிறார்கள்.

வேதாந்த்

வேதாந்த், ஆன்மீக அறிவாளி மற்றும் ஆன்மீன ஞானம் கொண்டவர் என்ற பொருளைக் கொண்டது. இது ஆழ்ந்த புரிதல் மற்றும் பழமை ஞானத்துடன் தொடர்புடையவர் என்ற அர்த்தத்தை தருகிறது. வேதங்களை கற்றறிந்தவர் என்ற அர்த்தத்தில் வேதங்களில் இருந்து எடுக்கப்பட்ட பெயரை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சூட்டினால் அவர்கள் அதிபுத்திசாலிகளாவார்கள்.

விதான்

விதான் என்றால், கற்றறிந்தவர் மற்றும் அறிவாளி என்று பொருள். இது படிப்பாளி மற்றும் ஞானமானவர்கள் என்ற அர்த்ததை தருகிறது. இந்த பெயரை உங்கள் குழந்தைக்கு சூட்டினால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.