தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kadapa Chutney: இட்லிக்கு அட்டகாசமான காமினேஷன் கடப்பா சட்னி

Kadapa Chutney: இட்லிக்கு அட்டகாசமான காமினேஷன் கடப்பா சட்னி

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 19, 2023 11:00 AM IST

பொதுவாக இட்லி தோசைக்கு ஒரே மாதிரி சட்னி செய்து போரடிக்கிறதா வித்தியாசமான முறையில் இப்படி கடப்பா சட்னி செய்து பாருங்க ருசி அருமையாக இருக்கும்

கடப்பா சட்னி
கடப்பா சட்னி

ட்ரெண்டிங் செய்திகள்

செய்முறை

எள்

பூண்டு

இஞ்சி

மிளகாய்

கறிவேப்பிலை

கொத்தமல்லி

கடலை லெண்ணெய்

தக்காளி

உப்பு

கடுகு

உளுந்தம்பருப்பு

சீரகம்

செய்முறை

ஒரு சூடான வாணலியில் எண்ணெய் விட்டு அதில் இரண்டு ஸ்பூன் எள்ளை சேர்த்து வறுக்க வேண்டும். வெள்ளை எள், கறுப்பு எள் எது வேண்டுமானாலும் நம் விருப்பப்படி சேர்த்து கொள்ளலாம். 

அதில் ஒரு 10 பல் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். ஒரு 7 பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும். உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் எண்ணிக்கையை கூட்டி குறைத்து கொள்ளலாம். பின்னர் அதில் 2 துண்டு இஞ்சி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். நல்ல வாடை வர ஆரம்பிக்கும் போது அதில் ஒரு அரை முடி தேங்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் கொஞ்சம் கறிவேப்பிலை மற்றும் 2 கைபிடி கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் தேவையான உப்பை சேர்த்து கொள்ள வேண்டும். வதக்கிய பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஆற விட வேண்டும். பின்னர் அதை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இப்போது அதே கடாயில் ஒரு தக்காளியை கொஞ்சமாக மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வதங்கிய பின் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து லேசாக அரைத்து கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ள வேண்டும்.

பின்னர் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சீகரம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து சட்னி மேல் கொட்ட வேண்டும். இந்த கடப்பா சட்னி சூடான இட்லிக்கு அட்டகாசமன காமினேஷன். இது தோசை சப்பாத்திக்கும் பயன்படுத்தலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்