தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Iodine Salt : அயோடின் உப்பில் உள்ள ஆபத்துகள் – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Iodine Salt : அயோடின் உப்பில் உள்ள ஆபத்துகள் – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Priyadarshini R HT Tamil
Aug 13, 2023 12:46 PM IST

Iodine Salt : கடலில் இருந்து கிடைக்கும் உப்பில் 84 வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஒருவருக்கு நாளொன்றுக்கு 2 கிராம் அளவு உப்பே போதுமானது. பொதுவாக உப்பை சோடியம் குளோரைடு என்று கூறுவர்.

கல் உப்பா அல்லது அயோடின் உப்பா எது நல்லது?
கல் உப்பா அல்லது அயோடின் உப்பா எது நல்லது?

ட்ரெண்டிங் செய்திகள்

• சோடியம்,

• பொட்டாசியம்,

• இரும்புச்சத்து,

• கால்சியம் சத்து,

• பாஸ்பரஸ் சத்து,

• குரோமியம் சத்து,

• அயர்ன்,

• துத்தநாகம்,

• மெக்னீசியம்

• அயோடின் சத்துக்கள் இருக்கின்றன.

உப்பில் உள்ள அயோடினை உலகில் எங்குமே யாரும் பிரித்து எடுப்பதில்லை. இதற்கு மாறாக தேவையான குறிப்பிட்ட அளவு அயோடினை சேர்க்கின்றனர்.

நம்முடைய முன்னோர்கள் மேற்கண்ட 84 வகையான சத்துக்கள் உள்ள கல் உப்பையே பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.

கடல்நீரை பாத்திகட்டி உப்பு தயாரிக்கும் முறை கடலோர மாவட்டங்களில் (தூத்துக்குடி, வேதாரண்யம் மாவட்டங்களில்) இன்றும் இருந்து வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

உப்பானது மனிதனின் உடலில் உள்ள திரவ நிலையை (எலக்ட்ரோ லைட்ஸ்) சீராக வைத்திருக்க உதவுவது.

நம் உடலின் தசை, நரம்பு, நாடி, ரத்த நாளங்களின் இயக்கத்திற்கு உப்புச்சத்து மிக மிக முக்கியமானது.

ஒரு நாளைக்கு ஒருவருக்கு தேவைப்படும் உப்பின் அளவு அதிகபட்சமாக 6 கிராமிற்கு மேல் அதிகரிக்கக்கூடாது.

மனித உடல் இயற்கையாக அயோடின் சத்தை உற்பத்தி செய்வதில்லை.

நாம் உண்ணும் உணவின் மூலமாகத்தான் அயோடின் சத்தை இயற்கையாக நம்மால் பெறமுடிகிறது.

கடல்நீரில் இருந்து பிரித்து எடுக்கப்படும் உப்பில்தான் அயோடின், செலினியம் போன்ற 84 வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் சோடியத்தை தவிர 83 சத்துக்களையும் அறவே நீக்கிவிட்டு குறைந்த அளவு அயோடினை மட்டுமே தற்போது சேர்க்கிறார்கள்.

ஏன் சோடியம் குளோரைடுடை மட்டும் நீங்குவதில்லை என்றால்,

• பிளாஸ்டிக் தொழிற்சாலைகள்

• பிவிசி பைப் தயாரிக்கும் தொழிற்சாலைகள்,

• காகித கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள்,

• குளோரின் தயாரிப்பு தொழிற்சாலைகள்,

• உணவு பதனிடும் தொழிற்கூடங்கள் இவைகளுக்கு சுத்தமான சோடியம் குளோரைடு தேவைப்படுகிறது.

இதற்காக ஒட்டுமொத்த உப்பையும் சுத்தம் செய்து சோடியம் குளோரைடு தவிர எஞ்சிய 83 சத்துக்களையும் அறவே நீக்குகிறார்கள்.

94 பங்கு உப்பை தொழிற்சாலைகளுக்கும், எஞ்சிய 6 பங்கு உப்பில் அயோடினையும் சேர்த்து வழங்குகிறார்.

உப்பளங்களில் இருந்து கிடைக்கும் இயற்கை உப்பை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உபயோகித்து வந்த நாம் சுத்திகரிக்க வேண்டும் என்பது மேற்கண்ட காரணங்களுக்காகத்தான்.

இதற்கு பிறகு தான் அயோடின் குறைபாடு நோய்கள் இன்று அதிகம் ஏற்பட தொடங்கிவிட்டது.

இயற்கை உப்பில் இருக்கும் அயோடின் திடமானது, கரையாது. ஆனால் சாதாரண கல் உப்பில் கலக்கும் செயற்கை அயோடின் ஸ்திரமற்றது. கரையும் தன்மையுடையது.

உப்பு பாக்கெட்டை திறந்து வைத்தால், அதில் உள்ள அயோடின் சத்துக்கள் ஆவியாகிவிடும்.

தேவைக்கு அதிகமாக அயோடின் கலப்பதால் ஹசிமோட்டோஸ் எனும் ஆட்டோ இம்யூன் நோய் அதிகரிக்கிறது.

தேவைக்கு அதிகமான உப்பை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது இதய நோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுகின்றன.

எனவே உப்புகள் அதிகம் சேர்க்கப்படும் உணவு மற்றும் திண்பண்டங்களை குழந்தைகளுக்கு வாங்கி தரக்கூடாது.

அயோடின் உப்பு வேலை செய்வதற்கு செலினியம் என்ற தாது பொருள் வேண்டும். கடல் உப்பில் செலினியம் அதிக உண்டு. அயோடின் உப்பில் இல்லை. செலினியம் இல்லாத உப்பு தான் ஹஸிமோட்டோஸ் நோய் வரக் காரணமாகிறது.

கல் உப்பு கடல் நீரில் இருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. டேபிள் சால்ட் என்பது கடல்நீரில் இருந்து மட்டுமின்றி பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பில் மிஞ்சும் கழிவுகளில் இருந்தும் இந்த உப்பு தயாரிக்கப்பட்டு பாலிஷ் செய்து பளபளப்பாக்குகின்றனர்.

நம்முடைய அன்றாட உணவு பொருட்கள் மூலமாக அயோடின் இயற்கையாகவே கிடைக்கிறது. மேலும்

• மீன் வகைகள்,

• முட்டை,

• பால்,தயிர்,மோர், உருளைக்கிழங்கு,

• பீன்ஸ் வகைகள்,

• வாழைப்பழம்,

• கடல்பாசி,

• கத்தரிக்காய்,

• முருங்கைக்காய், வெண்டைக்காய்,

• அனைத்து கீரைகள்,

• அனைத்து வகையான பழங்கள்

என எல்லாவற்றிலும் அயோடின் சத்து இருக்கிறது.

கடல் சார்ந்த நிலப்பகுதியில் வளரும் கீரை, காய், பழம், கடல்வாழ் உயிரினங்களை உணவாக எடுத்துக் கொள்ளும் மக்களுக்கு தைராய்டு நோய் மற்றும் அயோடின் சத்து குறைபாடு பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

கடல்சாரா இடங்களில் நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கே தைராய்டு நோய் மற்றும் அயோடின் சத்து குறைபாடு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இயற்கையாக கிடைக்கின்ற கல் உப்பை பயன்படுத்தினால் அயோடின் குறைபாடு ஏற்படுவதில்லை என்பதற்கு நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததே இதற்கு சான்று.

என்றைக்கு சுத்திகரிக்கப்பட்ட உப்பை (Refined) நாம் பயன்படுத்த ஆரம்பித்தோமோ அன்றே அயோடின் சத்து குறைபாடும் அதைச் சார்ந்த நோய்களும் வர தொடங்கிவிட்டது.

நாம் உண்ணும் உணவில் அயோடின் சத்து குறைபாடு இருந்தால் முன் கழுத்து கழலை (Goitre) நோய் உருவாகிறது.

1924ம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்காவில் தான் அயோடைடு ரீபைண்டு உப்பு அறிமுகப் படுத்தப்பட்டது.

முன் கழுத்து கழலை நோய் உள்ளவர்களுக்கு மேற்கண்ட உப்பை வழங்கி இந்த நோய் தாக்கத்தை குறைத்தனர்.

இதையறிந்த இந்தியர்கள் அயோடைடு ரீஃபைண்ட் உப்பை பயன்படுத்த தொடங்கினர்.

மேலும் 85க்கும் மேற்பட்ட உலக நாடுகள் அயோடைடு ரீபைண்டு உப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலமாக அயோடின் சத்து குறைபாடு இல்லாத மக்களும் மேற்கண்ட உப்பை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே அயோடின் சத்து மிகுதி காரணமாக

• வாய் மற்றும் தொண்டை எரிச்சல்

• தலைவலி வாயில் நீர் ஊறல்,

• ஒழுங்கற்ற இதயத்துடிப்பு

• சுவை மாற்றம்,

• கை, கால் மரத்துப் போகதல்

• நடுக்கம், உடல் வலி

• பாதம் பலவீனமாக தோன்றுதல்,

• பல் ஈறுகளில் புண்,

• வயிறு சம்பந்தமான பிரச்னை,

• ரத்த கொதிப்பு நோய்,

• சர்க்கரை நோய்,

• சிறுநீரக பாதிப்புகள்,

• தைராய்டு நோய்,

• தோல் நோய்,

• நுரையீரல் பாதிப்பு

போன்ற நோய்கள் தொடர்ந்து அயோடின் கலந்த உப்பை தொடர்ந்து உணவில் சேர்த்து வருவதின் மூலமே ஏற்படுகிறது என்பதை அறிய முடிகிறது.

எனவே இயற்கையாக கடலிலிருந்து கிடைக்கும் சாதாரண கல் உப்பை பயன்படுத்துங்கள். அயோடின் சத்து குறைபாடு இருந்தால் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துங்கள்.

இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களுக்கு நோய் வருவதில்லை. இயற்கைக்கு மாறாக நாம் எதைச் செய்தாலும் நிச்சயமாக நோய் வரும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

டாக்டர். காமராஜ், மாவட்ட சித்த அலுவலர் (ஓய்வு), திருச்சி.

WhatsApp channel

டாபிக்ஸ்