தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Industrial Waste : தொழிற்சாலை கழிவுகளால் ஆரோக்கிய குறைபாடு – கண்டுகொள்ளாத மாசு கட்டுப்பாட்டு மையம்!

Industrial Waste : தொழிற்சாலை கழிவுகளால் ஆரோக்கிய குறைபாடு – கண்டுகொள்ளாத மாசு கட்டுப்பாட்டு மையம்!

Priyadarshini R HT Tamil
May 25, 2024 02:48 PM IST

Industrial Waste : தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள் பெருகிவரும் வேளையில், அதை மாசு கட்டுப்பாட்டு மையம் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

Industry Waste : தொழிற்சாலை கழிவுகளால் ஆரோக்கிய குறைபாடு – கண்டுகொள்ளாத மாசு கட்டுப்பாட்டு மையம்!
Industry Waste : தொழிற்சாலை கழிவுகளால் ஆரோக்கிய குறைபாடு – கண்டுகொள்ளாத மாசு கட்டுப்பாட்டு மையம்!

ட்ரெண்டிங் செய்திகள்

தொழிற்சாலை கழிவுகள் ஏற்படுத்தும் ஆபத்துக்கள்

கடந்த 6 மாதமாக, எண்ணூர் மக்கள், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் Online Continuous effluent and Emission Monitoring System (OCEMS) வாயிலாக வெளிவரும் புள்ளிவிவரங்கள் பொதுவெளியில் இல்லாதால், அதை அறிய முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஜனவரி 2024ல் இருந்து, எண்ணூர் அனல்மின் நிலையங்கள், Ashok Leyland Foundary Division, Hindhuja Foundaries போன்றவற்றில் இருந்து வெளியாகும் கழிவுகள் குறித்தான, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடும் தொடர் கண்காணிப்பு Online புள்ளிவிவரங்களை பார்க்க முயற்சித்தும், கடந்த 6 மாதங்களாக, TNPCB இணைய தளத்தில் (Care Air Centre-Air Quality Watch) எந்த புள்ளிவிவரமும் இல்லாமல் இருப்பது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளார் சீனிவாசன் என்பவர். இவர் இதுகுறித்து ஆய்வுகள் செய்பவர். 

எண்ணூர் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த துர்கா மூர்த்தி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், வடசென்னையில் இயங்கும் ஆலைக் கழிவுகளின் புள்ளிவிவரத்தைக் கேட்டும், எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

மாசு தொடர்பான Online தரவுகள், அரசு விதிகளின் படி, Server ல் உள்ள புள்ளிவிவரங்கள், பெருங்குடியில் உள்ள மாநில தரவுகள் மையத்திற்கு கொண்டு செல்லப்படுவதால், அதன் உடனுக்குடன் புள்ளிவிவரங்கள் (Live Data), கடந்த 6 மாதத்திற்கு இல்லாமல் உள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மாசு குறித்தான புள்ளிவிவரங்கள் உள்ள Serverஐ பெருங்குடி அரசு தரவு மையத்திற்கு கொண்டு செல்வதில் தொழில்நுட்ப பிரச்னைகள் இருப்பதாக, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் மற்றும் செயலர் கண்ணன் தெரிவித்துள்ளார். Serverகளைக் கையாளும் சிலர் பணியை முடித்துவிட்டதாகவும், சிலர் பணியை முடிக்கவில்லை என்றும், விரைவில் பணி முடிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆன்லைனில் புள்ளிவிவரங்கள்

தொழில் நிறுவனங்களின் Online புள்ளிவிவரங்கள் ஏதோ வகையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரிந்து தான் இருக்கும். ஏனெனில் தவறிழைக்கும் ஆலைகளின் மாசு வெளியீட்டை கண்காணித்து, தவறிழைப்பது உறுதியானால் சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்வது TMPCBன் கடமை அல்லது பணி என்பது விதிகளில் தெளிவாக உள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேல்முறையீடு செய்ததற்கு, "Care Air Centre மூலம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நவம்பர் 2023க்குப் பின் எந்த தகவலும் இல்லை என்பதால், அவற்றை TNPCB பார்க்க முடியவில்லை" என்ற தகவல் வந்துள்ளது.

இந்த 6 மாத காலத்தில் எண்ணூரில் இயங்கும் ஆலைகள் தனது ஆலைக் கழிவுகள் தொடர்பான புள்ளிவிவரங்களை மாற்றும் வாய்ப்பு நிறைய உள்ளது. தேவைப்பட்டால் புகைபோக்கி வழியாக வெளியேறும் கழிவுகளின் புள்ளிவிவரத்தை அந்தந்த ஆலைகளிடமிருந்து TNPCB பெற்றுக்கொள்ளலாம்.

அடுத்த மாதம் 2024 வரை, ஆலைக் கழிவுகளின் புள்ளிவிவரங்களை TNPCB பார்க்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அலட்சியம்

இது, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனது சட்டரீதியான பணியான ஆலைக்கழிவுகள் வெளியாவதை Onlineல் கண்காணித்து வர வேண்டும் என இருந்தும், அதைச் செய்யாமல் அலட்சியத்துடன் செயல்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வடசென்னையில் (எண்ணூரில்) தொழிற்சாலைக் கழிவுகளின் புள்ளிவிவரங்கள் மக்களுக்கு சட்டப்படி தெரியப்படுத்தப்பட வேண்டும் என ஸ்ரீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் OCEMS புள்ளிவிவரங்களை முறையாக கண்காணிக்கிறதா? ஆலைக்கழிவுகள் மக்களை பாதிக்காதபடி, இருப்பதை சட்டப்படி உறுதிசெய்கிறதா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமே இப்படி குறைப்பாடுடன் செயல்படுவதை மக்கள் எப்படி ஏற்க முடியும்?

தமிழக அரசு செவிசாய்த்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா?

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

WhatsApp channel

டாபிக்ஸ்