Upcoming Airports in India: இந்தியாவில் புதிதாக அமைய இருக்கும் விமான நிலையங்கள் - ஒரு பார்வை
இந்திய அரசு விமான போக்குவரத்து துறையில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணத்தை பொதுமக்கள் எளிதில் அணுகும் விதமாக புதிய விமான நிலையங்களை பல்வேறு நகரங்களில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
(1 / 6)
இந்தியாவில் முக்கிய நகரங்களில் 5 புதிய விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 200 விமான நிலையங்கள் செய்பாட்டுக்கு வரும் விதமான இலக்கை மேற்கொள்ள இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்தியாவில் தற்போது விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கும் 5 புதிய விமான நிலையங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்(ANI Picture Service )
(2 / 6)
நெய்டா சர்வதேச விமான நிலையம் - உத்தரபிரதேசம் மாநிலம் ஜீவர் பகுதியில் இந்த பசுமையான விமான நிலையம் அமையவுள்ளது. இந்த விமான நிலையம் திறக்கப்பட்டால் டெல்லி இந்திரா காந்தி விமான நிலைத்தின் அணுகல் எளிதாகும்(india.com)
(3 / 6)
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே போகாபுரம் பகுதியில் புதிய சர்வதேச விமானம் அமைக்கப்படவுள்ளது. ஜிஎம்ஆர் குரூப் நிறுவனம் இந்த பணிகளை மேற்கொள்கிறகு. இந்த ஆண்டில் விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில் 2025இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது(GMR/Twitter)
(4 / 6)
கர்நாடக மாநிலம் ஷிவமோக்காவில் இந்த சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இதன் முதல் கட்ட பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்தில் வணிக செயல்பாடுகள் ஆகஸ்ட் 11 முதல் தொடங்கவுள்ளது(Twitter\MLASudhakar)
(5 / 6)
நவிமும்பை சர்வதேச விமான நிலையம், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவதற்காக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தின் முதல் கட்டம் 2025இல் திறக்கப்படும் என கூறப்படுகிறது(Marathon)
மற்ற கேலரிக்கள்