Savukku Shankar: சவுக்கு சங்கர் விவகாரம்! மேலிடத்தில் இருந்து அழுத்தமா ? நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் அதிர்ச்சி தகவல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar: சவுக்கு சங்கர் விவகாரம்! மேலிடத்தில் இருந்து அழுத்தமா ? நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் அதிர்ச்சி தகவல்!

Savukku Shankar: சவுக்கு சங்கர் விவகாரம்! மேலிடத்தில் இருந்து அழுத்தமா ? நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் அதிர்ச்சி தகவல்!

Kathiravan V HT Tamil
May 24, 2024 05:33 PM IST

Justice GR. Swaminathan About Savukku Shankar Case: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட விவகாரம் தொடர்பாக அதிகாரம் மிக்கவர்கள் தன்னிடம் பேசியதாக நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் கூறி உள்ளார்

சவுக்கு சங்கர் விவகாரம்! மேலிடத்தில் இருந்து அழுத்தமா ? நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் சொன்ன பரபரப்பு தகவல்!
சவுக்கு சங்கர் விவகாரம்! மேலிடத்தில் இருந்து அழுத்தமா ? நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் சொன்ன பரபரப்பு தகவல்!

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம்

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 12ஆம் தேதி குண்டர் சட்டத்தை சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

சவுக்கு சங்கரின் தாயார் ஆட்கொணர்வு மனு

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த ஆட்கொணர்வு மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என்ற உத்தரவாத மனுவை தாக்கல் செய்யும்படி சவுக்கு சங்கர் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

சவுக்கு சங்கருக்கு எதிராக அரசுத்தரப்பு வாதம்

இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கர் தரப்பில் உத்தரவாத மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், இதுவரை நடந்து கொண்ட செயல்பாடுகளை நியாயப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அரசு தரப்பு வாதிட்டது.

சவுக்கு சங்கர் தரப்பு எதிர்வாதம்

சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கர் கருத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லை பொது சொத்துக்களுக்கு பங்கம் ஏற்படவில்லை. 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையின் குண்டர் சட்ட உத்தரவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என வாதிட்டார்.

பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் மனு

மேலும் இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக சேர்த்துக் கொள்ள கூறி,பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் முறையீடு செய்து இருந்த நிலையில், இவர்கள் தரப்பின் வாதங்களும் கேட்கப்பட்டது.

நீதிபதியிடம் பேசிய அதிகாரம்மிக்கவர்கள் 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளனர்.

நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், சமுதாயத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தன்னிடம் பேசியதால், இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு அவசரமாக எடுத்ததாகவும், மாறாக பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தால், என்னிடம் அவ்வாறு பேசியவர்கள் தங்கள் இலக்கை அடைந்துவிடுவதாக அர்த்தம் ஆகிவிடும் என்பதால் இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார்.

மேலும் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்வதாகவும் நீதிபதி சுவாமிநாதன் கூறி உள்ளார்.

அரசு தரப்புக்கு அவகாசம் தர வேண்டும் - நீதிபதி பாலாஜி

நீதிபதி பாலாஜியை பொறுத்தவரை, வழக்கமான நடைமுறைப்படி இந்த வழக்கில் அரசுத்தரப்பு பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும். பதிலுக்கு பிறகே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பு வழங்கி உள்ளார்.

புழல் சிறைக்கு மாற்ற உத்தரவு

இரு நீதிபதிகளும் இரு வேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளதால் இந்த வாழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு நீதிபதிகள் பரிதுரை செய்து உள்ளனர். அதுமட்டுமின்றி கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கரை புழல் சிறைக்கு மாற்ற இரு நீதிபதிகளும் ஒருமித்த உத்தரவை பிறப்பித்து உள்ளனர்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.