Idly : இலவம் பஞ்சு போன்ற மிருதுவான இட்லி சாப்பிடவேண்டுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்க போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Idly : இலவம் பஞ்சு போன்ற மிருதுவான இட்லி சாப்பிடவேண்டுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்க போதும்!

Idly : இலவம் பஞ்சு போன்ற மிருதுவான இட்லி சாப்பிடவேண்டுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்க போதும்!

Priyadarshini R HT Tamil
Sep 06, 2024 02:39 PM IST

Idly : இலவம் பஞ்சு போன்ற மிருதுவான இட்லி சாப்பிடவேண்டுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்க போதும். உங்கள் வீட்டில் தினமும் பஞ்சு போன்ற இட்லி தினமும் சாப்பிடலாம்.

Idly : இலவம் பஞ்சு போன்ற மிருதுவான இட்லி சாப்பிடவேண்டுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்க போதும்!
Idly : இலவம் பஞ்சு போன்ற மிருதுவான இட்லி சாப்பிடவேண்டுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்க போதும்!

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – 3 டம்ளர்

பச்சரிசி – 1 டம்ளர்

வெள்ளை உருட்டு உளுந்து – முக்கால் டம்ளர்

வெந்தயம் – ஒரு ஸ்பூன்

சாதம் – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

அரிசியை ஒரு கைப்பிடி உப்பு சேர்த்து அலசிவிட்டு 5 மணி நேரங்கள் நன்றாக ஊறவைக்கவேண்டும். அரிசி ஊறவைத்து 3 மணி நேரம் கழித்து உளுந்தை ஊறவைக்கவேண்டும். உளுந்து 2 மணி நேரம் ஊறினால் போதும். உளுந்துடன் வெந்தயத்தையும் சேர்த்து ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

ஊறிய அனைத்தையும் மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து தனித்தனியாக அரைத்துக்கொள்ளவேண்டும். அரிசியை அரைக்கும்போது கடைசியாக ஒரு கப் சாதத்தை சேர்த்துக்கொள்ளவேண்டும். இந்த சாதத்தை சேர்ப்பதால்தான் இட்லி இலவம் பஞ்சுபோல் மிருதுவாக இருக்கும். பின்னர் உளுந்தை அரைத்து சேர்த்து உப்பும் சிறிதளவு சேர்த்து மாவை நன்றாக கரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இதை 8 மணி நேரம் கட்டாயம் புளிக்கவிடவேண்டும். அதை மிருதுவாக கரைத்துவிட்டு, இட்லி தட்டில் இட்லிகளை ஊற்றவேண்டும்.

இட்லி பாத்திரத்தில் தண்ணீரை சேர்த்து அது கொதிப்பின் ஊற்றிய மாவுத்தட்டை வைத்து இட்லிகளை வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இப்படி செய்தால் மதுரை மல்லிப்பூபோன்ற மிருதுவான இட்லி தயாராகிவிடும்.

இந்த இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், அசைவ குழம்புகள் மற்றும் குருமாக்கள் ஏற்ற தேர்வாக உள்ளது. இந்தியாவில் பல்வேறு வகை சட்னிகள் உள்ளன. அதில் எதை வைத்தும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். காலையில் இட்லியுடன் ஒரு வடையும் சேர்த்து பரிமாறினால் சுவை நன்றாக இருக்கும். பொதுவாக தென்னிந்தியாவில் இட்லி, வடை பொங்கல், சட்னி, சாம்பார், ஒரு ஸ்வீட், ஊத்தப்பம் அல்லது பூரியுடன் காலை உணவு மினி டிஃபனாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.