தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ht Exclusive: ரங்கோலியில் சுந்தர காண்டம்-இல்லத்தரசியின் மாறுபட்ட முயற்சி!

HT Exclusive: ரங்கோலியில் சுந்தர காண்டம்-இல்லத்தரசியின் மாறுபட்ட முயற்சி!

Manigandan K T HT Tamil
Dec 29, 2023 12:45 PM IST

'இந்த ஆண்டு சுந்தர காண்டத்தின் கதையை ரங்கோலி வழி காண்பிக்க முயற்சி செய்து வருகிறேன். அதை வீடியோவாக பதிவு செய்து யூ-டியூப் சேனலிலும் அப்லோடு செய்து வருகிறேன்' என்கிறார் சென்னையைச் சேர்ந்த அபர்ணா.

வண்ணம் வழி சுந்தர காண்டம்
வண்ணம் வழி சுந்தர காண்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

கோலங்களில் சுந்தர காண்டம் கதையை உருவாக்கி அசத்தி வருகிறார் இல்லதரசியாக இருக்கும் அபர்ணா. இவரது யூ-டியூப் சேனலில் 'வண்ணம் வழி சுந்தர காண்டம்' என்ற பெயரில் இந்த முயற்சியை வீடியோவாக எடுத்தும் அப்லோடு செய்து வருகிறார்.

அவரிடம் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் தளத்திற்காக நாம் கண்ட பேட்டி:

எனது அம்மாவும் என் தாய் மாமாவும் கலையில் எனக்கு உத்வேகம் அளித்தனர். அவர்களிடமிருந்து கலைப் படைப்புகளை உருவாக்குவது குறித்து கற்றுக்கொண்டேன். மார்கழியில் வீட்டு வாசலில் கோலம் போடுவது வழக்கம். இந்த மாதத்தில் நம் திறமையை வண்ணங்களில் காட்ட முயற்சி செய்கிறோம். 4 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் உள்ள எனது உறவினரின் கோலம் போடும் திறமையால் ஈர்க்கப்பட்டு, கருத்து சார்ந்த கோலங்களை உருவாக்க முயற்சிக்கத் தொடங்கினேன்.

முதலில் அனைத்து இந்திய கலை வடிவங்களில் கோலங்களை போடத் தொடங்கினேன். பிறகு வருடா வருடம் இதை மெருகேற்றி வந்தேன். என் கணவர்தான் எனக்கு ஊக்கம் தந்து வருகிறார். மேலும் கருத்து அடிப்படையிலான ரங்கோலியை உருவாக்க அவர் என்னை ஊக்கப்படுத்தினார். அதனால் கடந்த ஆண்டு திருப்பாவை, திருவெம்பாவை கோலங்களில் கொண்டு வர முயற்சி செய்தேன். இந்த ஆண்டு சுந்தர காண்டத்தின் கதையை ரங்கோலி வழி காண்பிக்க முயற்சி செய்து வருகிறேன். அத்துடன், எனது கோலங்களை வீடியோவாக பதிவு செய்து யூ-டியூப் சேனலிலும் அப்லோடு செய்து வருகிறேன் என்கிறார் அபர்ணா.

கேள்வி: இது கோலமா அல்லது ஓவியமா? இதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் என்னென்ன?

பதில்: கோலம் தான். Colour கோல பொடிகள் தான் பயன்படுத்துகிறேன்.

கேள்வி: இதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுகிறது? வீட்டையும் கவனித்துக் கொண்டு ரங்கோலி வரைவதற்கு நேரம் ஒதுக்குவது எப்படி?

பதில்: ஒரு Concept போட 6-8 மணி நேரம் வரை ஆகும். ஒரு நாள் முன்னதாகவே ஆரம்பித்துவிடுவேன். குழந்தைகளை பள்ளிக்கும் கணவரை அலுவலகத்திற்கும் அனுப்பிவிட்டு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அவர்கள் திரும்பி வருவதற்குள் முடித்துவிடுவேன். இது எனக்கு கடினமாக தெரியவில்லை. என் கணவர் மற்றும் குழந்தைகள் பரிந்துரைகள், திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் சொல்லுவார்கள். அதையும் ஏற்றுக் கொண்டு திருத்துவேன்.

கணவருடன் அபர்ணா சுரேஷ்
கணவருடன் அபர்ணா சுரேஷ்

கேள்வி: ‘வண்ணம் வழி சுந்தர காண்டம்’ யூ-டியூப் வழியாக காட்சிப்படுத்துவது நல்ல முயற்சி? இந்த யோசனை எப்படி வந்தது?

பதில்: எனது முயற்சியை யூ-டியூப் தளத்தில் அப்லோடு செய்யுமாறு நண்பர்களும் உறவினர்களும் ஏற்கனவே யோசனை கூறியிருந்தனர். இந்த முறை சுந்தரகாண்டத்தை வீடியோ கதையாக சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றவே அதை முயற்சி செய்தோம். தற்போது எனது Ap's & colours யூ-டியூப் சேனலில் தொடர்ச்சியாக அப்லோடு செய்து வருகிறேன்.

உங்களின் எதிர்கால திட்டம்?

பதில்: எதிர்கால திட்டங்கள் என எதுவும் இல்லை. கலைக்கான என் தாகத்தை இந்த வழியில் தணித்துக் கொள்கிறேன். என் ஆசைக்கு என் கணவர் துணை நிற்கிறார் அவ்வளவுதான். இது தவிர, என் கணவரின் யோசனைப்படி கருத்து அடிப்படையிலான கொலுவையும் வைக்கிறேன்.

நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கவும், வெறும் ஆர்வத்துக்காக மட்டுமே இதை செய்து வருகிறேன். வணிக ரீதியாக எதையும் எதிர்காலத்தில் செய்யும் திட்டம் இல்லை என்கிறார் அபர்ணா சுரேஷ்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்