Banana Fry: வாய் ஊற வைக்கும் வாழைக்காய் வறுவல்! சட்டுனு செய்யலாம்! ஈஸியான ரெசிபி இங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Banana Fry: வாய் ஊற வைக்கும் வாழைக்காய் வறுவல்! சட்டுனு செய்யலாம்! ஈஸியான ரெசிபி இங்க!

Banana Fry: வாய் ஊற வைக்கும் வாழைக்காய் வறுவல்! சட்டுனு செய்யலாம்! ஈஸியான ரெசிபி இங்க!

Suguna Devi P HT Tamil
Oct 01, 2024 02:39 PM IST

Banana Fry: முக்கனிகளில் ஒன்றான வாழையில் வளரும் அனைத்து பாகங்களும் உணவுக்கு பயன்படுகின்றன. அதன் குருத்து முதல் இலை வரை அனைத்தும் உணவு உண்பதற்கு பயன்படுகின்றன.

Banana Fry: வாய் ஊற வைக்கும் வாழைக்காய் வறுவல்! சட்டுனு செய்யலாம்! ஈஸியான ரெசிபி இங்க!
Banana Fry: வாய் ஊற வைக்கும் வாழைக்காய் வறுவல்! சட்டுனு செய்யலாம்! ஈஸியான ரெசிபி இங்க!

தேவையான பொருட்கள்

2 வாழைக்காய்

1 பெரிய வெங்காயம்

1 தக்காளி

எலுமிச்சம் பழம்

சிறிதளவு மல்லி தூள்

சிறிதளவு மஞ்சள் தூள்

6 பல் பூண்டு

சிறிதளவு இஞ்சி

1 டேபிள் ஸ்பூன் சோம்பு தூள்

1 டீஸ்பூன் சோம்பு

1 பட்டை

சிறிதளவு கறிவேப்பிலை

தேவையான அளவு மிளகாய் தூள்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு நெய்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் வாழைக்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி போட்டு, அதன்உடன் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் தக்காளி,வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். பின் இஞ்சி பூண்டை அரைத்து பேஸ்ட் ஆக்கி கொள்ளவும். பின்னர் வேக வைத்த வாழைக்காய் துண்டுகளை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து அதை ஆற விடவும். 

அடுத்து ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் சோம்பு தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் அரை எலுமிச்சை பழ சாறை ஊற்றி அதை நன்கு கலக்கவும். அதில் தண்ணீர் மற்றும் மல்லித்தூள் சேர்த்து கிளறி விடவும்.  

அடுத்து அந்த மசாலாவில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் வாழைக்காய் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி அதை சுமார் 10 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விடவும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவி வைத்திருக்கும் வாழைக்காயை போட்டு பொரிக்கவும். 

பின்பு மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பட்டை, சோம்பு சேர்த்து வறுக்கவும். சோம்பு வறுபட்டதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் கருவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும். 

தக்காளி சிறிது வதங்கியதும் அதில் வறுத்து எடுத்து வைத்திருக்கும் வாழைக்காயை போட்டு பக்குவமாக நன்கு கிளறி விட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை அவ்வப்போது கிளறி விட்டு வேக விடவும். சூடான வாழைக்காய் வறுவல் தயார். இதனை ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவைகளுக்கு வைத்து சாப்பிடலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.