Benefits of Karpuravalli Leaves : நம்ப முடியாத அளவு நன்மைகளை அள்ளிவழங்கும் ஓமவல்லி இலைகள்! சக்தி வாய்ந்த வலி நிவாரணி!
Benefits of Karpuravalli Leaves : நம்ப முடியாத அளவு நன்மைகளை அள்ளிவழங்கும் கற்பூரவல்லி அல்லது ஓமவல்லி இலைகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள். சக்தி வாய்ந்த வலி நிவாரணியாகவும் அது உள்ளது.
ஓமவல்லி இலைகள் அல்லது கற்பூரவல்லி இலைகளை, அதன் தண்டுகளை நட்டு வைத்து எளிதாக வீட்டில் வளர்த்துவிடலாம். ஒரே ஒரு செடியை பறித்து நட்டுவைத்தால் போதும், வீட்டில் அடர்ந்து படர்ந்து வளர்ந்துவிடும். பல ஆண்டுகளாக இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தின் அங்கமாக ஓமவல்லிச் செடிகள் உள்ளது. இது பல்வேறு உடல் உபாதைகளுக்கு நிவாரணம் தருகிறது. இந்த ஓமவல்லி என்ற மூலிகைச் செடி தென்னிந்தியாவில்தான் பரவலாக உள்ளது. இதன் எண்ணற்ற நற்குணங்களுக்காக இது அறியப்படுகிறது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது மற்றும் செரிமானத்தைத் தூண்டுகிறது. இது இதன் மருத்துவ குணங்களுக்காக பல தலைமுறைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஓமவல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள்
ஓமவல்லி இலைகளில் எண்ணற்ற மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இந்த இலைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. வைட்டமின்கள் மற்றும் மினரல்களும் நிறைந்தது. இது வீக்கத்துக்கு எதிராக செயல்படக்கூடியது. இதில் உள்ள ரோஸ்மாரினிக் அமிலம் அதற்கு உதவுகிறது. இது உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கிறது. ஓமவல்லி இலைகளில் நீரிழிவு நோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது என்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது எலிகளில் செய்யப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி இலைகளில் பாக்டீரியா, பூஞ்ஜை மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இதன் எண்ணெய்கள், நுண்ணுயிர்களின் நடவடிக்கைகளுக்கு எதிரானது. பல்வேறு வகை பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்ஜைகளுக்கு எதிரானதும் ஆகும்.
செரிமானம்
கற்பூரவல்லி அல்லது ஓமவல்லி இலைகளில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இது பல்வேறு உடல் உபாதைகளுக்கு இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஓமவல்லியில் உள்ள முக்கிய எண்ணெய்கள் செரிமான எண்சைம்களின் உற்பத்தியை தூண்டுகின்றன. இது வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கலைப்போக்க உதவுகிறது. இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், செரிமான மண்டலத்துக்கு இதமளித்து, வீக்கத்தைக் குறைக்கிறது.
சளி, இருமல், சுவாச மண்டலம்
கற்பூரவல்லி அல்லது ஓமவல்லி இலைகளின் அடுத்த முக்கியமான நற்குணம் அது சளி மற்றும் இருமலுக்கு அளிக்கும் நிவாரணம்தான். இதன் உட்பொருட்கள் சுவாசப்பாதையில் உள்ள பிரச்னைகளை சுத்தம் செய்ய உதவுகிறது. இது சுவாச தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் உள்ள வைரஸ்களுக்கு எதிரான குணங்கள், சளி மற்றும் இருமவை ஏற்படுத்தும் வைரஸ்களை எதிர்த்து போராட உதவுகிறது.
மாதவிடாய் வலி நிவாரணி
மாதவிடாயின்போது பெண்களுக்கு ஏற்படும் வலிகளைப்போக்க, ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி இலைகள் உதவுகின்றன. இதன் வலி நிவாரண குணங்கள் வலியைக் குறைத்து, மாதவிடாயுடன் தொடர்புடைய வீக்கங்களை குணப்படுத்துகிறது. இது மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துகிறது. மாதவிடாயுடன் தொடர்புடைய மற்ற அறிகுறிகளையும் போக்குகிறது.
கற்பூர வல்லி அல்லது ஓமவல்லி இலைகள் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. இதனால் இது உணவாகவும், மருந்தாகவும் உட்கொள்ளப்படுகிறது.
பயன்படுத்தும் முறை
ஓமவல்லி அல்லது கற்பூரவல்லியில் தேநீர் தயாரித்து தேன் கலந்து பருகலாம். நீங்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்களில் சீசனிங்குகளுக்குப் பயன்படுத்தாலம். இந்த இலையில் உள்ள தைம் என்ற குணம் இதை சூப்கள் மற்றும் ஸ்டூகளில் பயன்படுத்த உகந்ததாக்குகிறது.
இதை சரும நோய்களுக்கும் பயன்படுத்தலாம். முகப்பருக்கள், பூச்சிக்கடிகள், ராஷ்களுக்கு பயன்படுத்தலாம். இதை தண்ணீர் கலந்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி சில நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான தண்ணீரில் அலசலாம். சட்னி, பஜ்ஜி என விதவிதமான உணவுகள் செய்து சாப்பிடலாம்.
ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி இலைகள் பரவலாகப்பயன்படுத்தப்படும் ஒரு மூலிகைச் செடியாகும். எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்தது. உங்கள் ஆரோக்கிய வாழ்வில் இதை சேர்ப்பது சிறந்தது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள். பல்வேறு உடல் உபாதைகளுக்கு தீர்வளிக்கிறது. எனவே இதைப்பயன்படுத்தி வாழ்வில் ஆரோக்கியத்தை பேணுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்