Sesame Rice: உடலுக்கு வலிமை அளிக்கும் எள் சாதம் செய்வது எப்படி? சத்தான ரெசிபிய தெரிஞ்சுக்கோங்க!
Sesame Rice: இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் ஒன்று தான் எள், இதில் கருப்பு எள், வெள்ளை எள் என இரு வகைகள் உள்ளன.
இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் ஒன்று தான் எள், இதில் கருப்பு எள், வெள்ளை எள் என இரு வகைகள் உள்ளன. மாதவிடாய் கோளாறு முதல் எலும்பு வலிமை வரை பல பிரச்சனைகளுக்கு இது தீர்வு அளிக்கிறது. மேலும் இந்த எள்ளை பயன்படுத்தி பல உணவு வகைகள் செய்யலாம். மதிய உணவிற்கான எள் சாதம் செய்யும் எளிய முறையை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
1 கப் பாசுமதி அரிசி
3 டிஸ்பூன் எள்ளு
10 காய்ந்த மிளகாய்
3டிஸ்பூன் கடலை பருப்பு
3டிஸ்பூன் உளுத்தம் பருப்பு
1டிஸ்பூன்மிளகு
1 டிஸ்பூன் சீரகம்
1 டிஸ்பூன் கடுகு
சிறிதளவு பெருங்காய தூள்
புளி
சிறிதளவு நிலக்கடலை
சிறிதளவு முந்திரிப் பருப்பு
தேங்காய்
எலுமிச்சை
தேவையான அளவு உப்பு
சிறிதளவு கறிவேப்பிலை
சிறிதளவு நெய்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை ஊற வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊறி சூடானதும், அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும். பின் அதனுடன் சீரகம், வற மிளகாய், மிளகு, சிறிதளவு புளி சேர்க்த்து வறுக்கவும். இரண்டு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு வறுக்கவும். மூன்று நிமிடத்திற்க்கு பிறகு அது பொன்னிறம் ஆனதும் அதில் எள்ளு விதைகளை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வறுக்கவும்.
ஒரு நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதில் ஒரு மேஜைகரண்டி அளவு கல் உப்பு மற்றும் பெருங்காயத்தை சேர்த்து அதை ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விட்டு ஆறவிடவும். அது ஆறியவுடன் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நைசாக அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் மூன்று மேஜைகரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சுட்டதும் அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து அது நன்கு பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும். அது பொன்னிறமானதும் அதில் இரண்டு காய்ந்த மிளகாய், கடுகு, மற்றும் கருவேப்பிலை இலைகளை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும். அரை நிமிடத்திற்க்குப் பிறகு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து அரிசி உடைந்து விடாமல் பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் அதை நன்கு கிளறி விடவும். பின்பு அதில் சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு நெய் மற்றும் நாம் அரைத்து எடுத்து வைத்திருக்கும் எள்ளு பொடியில் இருந்து சுமார் மூன்று மேதைகரண்டி அளவு சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். சுவையா மற்றும் சத்தான எள் சாதம் தயார். இது மதிய உணவிற்கு மிகுந்த சரியான உணவாகும்.
டாபிக்ஸ்