தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Rasgulla: வீட்டில் இருக்க எல்லோருக்கும் குல்லா போட செய்யுங்கள்.. குண்டு குண்டு ரசகுல்லா!

Rasgulla: வீட்டில் இருக்க எல்லோருக்கும் குல்லா போட செய்யுங்கள்.. குண்டு குண்டு ரசகுல்லா!

Pandeeswari Gurusamy HT Tamil
May 09, 2023 10:59 AM IST

Yammy Rasagulla: முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் செய்து கொடுக்க முயற்சியுங்கள்... அப்படி ஆரம்பிப்பவர்களா நீங்கள் உங்கள் முயற்சிளை இதமான இனிப்புடன் தொடங்கலாம் வாங்க.

ரசகுல்லா
ரசகுல்லா

ட்ரெண்டிங் செய்திகள்

ரசகுல்லா பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் இனிப்பு ஆகும்.

ரசகுல்லா செய்ய தேவையான பொருட்கள்

பால் - 2 லிட்டர்,

ஏலக்காய் - 4

எலுமிச்சை - 1 சிறியது

கிராம்பு - 2

சீனி - 2 கப்

தண்ணீர் - 2 கப்

குங்குமப்பூ -சிறிதளவு

ரோஜா இதழ் - (விரும்பம் பொருத்தது)

பாதாம் - (விரும்பம் பொருத்தது)

முந்திரி- (விரும்பம் பொருத்தது)

பிஸ்தா- (விரும்பம் பொருத்தது)

முதலில் அடி கனமான பாத்திரத்தில் பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். பால் நன்றாக கொதித்த பின் எலுமிச்சம் பழ சாற்றை பிழிந்து அடுப்பை அணைத்து விட வேண்டும். சிறிது நேரம் கழித்து பால் திரிந்து இருக்கும். அந்த பாலை இளங்துணியில் வடி கட்டி பன்னீர் எடுத்து கொள்ள வேண்டும் அதை நன்றாக கழுவி விட்டு இருக்கி கட்டி ஒரு மணி நேரம் வரை தொங்க விட வேண்டும்.

பின் தண்ணீர் முழுவதும் வடிந்த பின் பன்னீரை நன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு பிசைய வேண்டும். எந்த அளவிற்கு பன்னீரை பிசைகிறோமோ அந்த அளவிற்கு ரசகுல்லா  மிருதுவாக கிடைக்கும்.

இதற்கிடையில் ஒரு பாத்திரத்தில் சீனியை எடுத்து அதே அளவு தண்ணீரை கலந்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்ச வேண்டும். பாகு கொதித்து வரும் போது சிறிது பாலை ஊற்றினால் சீனியில் இருக்கும் அழுக்குகள் பாத்திரத்தின் ஓரமா பிரியும். அதை எளிதாக எடுத்து விடாலாம். பின் பாகில் ஏலைக்காயை தட்டி போட்டு விட்டு இரண்டு கிராம்பையும் சேர்த்து கொள்ளலாம்.

பின்னர் நன்கு பிசைந்த பன்னீரை குட்டி குட்டி உருண்டையாக அழகாக உருட்டி எடுத்து கொள்ள வேண்டும். சர்க்கரை தண்ணீர் கரைந்து கொத்திக்க ஆரம்பித்த உடன் உருட்டி வைத்திருந்த உருண்டைகளை அடுப்பை சிம்மில் வைத்து விட்டு பாகுடன் சேர்க்க வேண்டும். நன்றாக மூடி சுமார் 5 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்து விட்டு சிறிது குங்குமப்பூவை தூவி விட்டு சுமார் 8மணி நேரம் மூடி வைத்து விட வேண்டும். அதன் பிறகு பாத்திரத்தை திறந்து பார்த்தால் வெள்ளை வெளேரென குண்டு குண்டு ரசகுல்லா ரெடியாக இருக்கும். இதில் அழகிற்கு உங்கள் விருப்பம் போல் ரோஜா இதழ்கள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
அப்புறம் என்ன நீங்களும் வீட்டிலேயே ரசகுல்லா செய்து ஜமாயுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்