Onion Rice: இனி லஞ்ச் டப்பாவுக்கு இது போதும்! வெங்காய சாதம் செய்வது எப்படி?
Onion Rice: பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்லும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மாதிரியான மதிய உணவு செய்து தருவது என்பது கடினமான காரியம் தான்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்லும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மாதிரியான மதிய உணவு செய்து தருவது என்பது கடினமான காரியம் தான். எப்போதும் போல சாம்பார், ரசம், புளிக்குழம்பு என செய்து தரும் போது, சலிப்பு ஏற்படுவதும் புதிய உணவு வகைகள் வேண்டும் எனவும் தோன்றுவது இயல்புதான். இதனை தீர்க்க ஒரு ரெஸிபி தான் இங்கு பார்க்கப் போகிறோம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே குறைந்த நேரத்தில் செய்து முடிக்கும் வெங்காய சாதம் செய்யும் முறையை காணலாம்.
தேவையான பொருட்கள்
3 கப் பாசுமதி அரிசி
200 கிராம் வறுத்த நிலக்கடலை
2 பெரிய வெங்காயம்
2 பல் பூண்டு
4 பச்சை மிளகாய்
2 டீஸ்பூன் கடலை பருப்பு
சிறிதளவு மஞ்சள் தூள்
தேவையான அளவு மிளகாய் தூள்
1 டீஸ்பூன் சீரகம்
தேவையான அளவு கடுகு
சிறிதளவு பெருங்காய தூள்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு புளி
தேவையான அளவு கறிவேப்பிலை
தேவையான அளவு கொத்தமல்லி
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
முதலில் அரிசியை கழுவி ஊற வைத்து எடுத்தக் கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு புளியை பத்து நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். அதில் சிறிதளவு உப்பை சேர்த்து ஊற வைத்து எடுத்த அரிசியை போட வேண்டும். அதனை வேக வைத்து எடுத்தக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, சீரகம், கடலை பருப்பு, மற்றும் வேர்க்கடலையை போட்டு வேர்க்கடலை நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுத்து அதில் வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை சேர்க்கவும். நன்றாக வதக்கவும். வதங்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம், சிறிதளவு உப்பு, பச்சை மிளகாயை சேர்த்து அதை நன்கு கிளறவும். கறிவேப்பிலை, புளி தண்ணீரை சேர்த்து கிளறவும். பின்பு அதில் தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் மூன்றி லிருந்து நான்கு நிமிடம் வரை வேக வைக்க வேண்டும்.
நான்கு நிமிடத்திற்க்குப் பிறகு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை அதில் சேர்த்து பக்குவமாக சாதம் உடையாதவாரு சுமார் ரெண்டு நிமிடம் வரை அதை கிளறி விட வேண்டும். சிறிது நேரத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி விட வேண்டும். அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான வெங்காய சாதம் ரெடி. மதிய உணவிற்கு ஏற்ற லஞ்ச் ரெஸிபி தயார். உங்கள் விட்டு குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவர்.
டாபிக்ஸ்