தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Yam Tawa Fry : சேனைக்கிழங்கு கல் வறுவல்.. செம டேஸ்ட்.. அதுவும் இப்படி செய்து பாருங்க!

Yam Tawa Fry : சேனைக்கிழங்கு கல் வறுவல்.. செம டேஸ்ட்.. அதுவும் இப்படி செய்து பாருங்க!

Divya Sekar HT Tamil
Aug 17, 2023 11:14 AM IST

சேனைக்கிழங்கு கல் வறுவல் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

சேனைக்கிழங்கு கல் வறுவல்
சேனைக்கிழங்கு கல் வறுவல்

ட்ரெண்டிங் செய்திகள்

மிளகாய் தூள்

மஞ்சள் தூள்

கரம் மசாலா தூள்

உப்பு

இஞ்சி பூண்டு விழுது

அரிசி மாவு

எண்ணெய்

புளி தண்ணீர்

செய்முறை

சேனைக்கிழங்கை தோலை எடுத்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இந்த கிழங்கு அரிக்கும் தன்மை கொண்டதால் கையில் உறை அணிந்து கொண்டோ அல்லது எண்ணெய் தேய்த்து கொண்டோ நறுக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய சேனைக்கிழங்கு மஞ்சள் தூள் உப்பு புளி தண்ணீர் சேர்த்து 50 சதவீதம் வேக வைக்கவும். நன்கு வேக வைக்க வேண்டாம். பின்னர் அதை தட்டில் வைத்து குளிர்விக்க வேண்டும். அதாவது ஆறவைக்க வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் காஷ்மீரி மிளகாய் தூள் அல்லது மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் உப்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் அரிசி மாவு எண்ணெய் மற்றும் புளி தண்ணீர் சேர்த்து கலக்கவும். நன்கு பேஸ்ட்டாக கலக்க வேண்டும். இந்த புளி தண்ணீர் சேர்ப்பதால் கிழங்கு அரிப்பு தன்மை இருக்காது.

பின்னர் வேகவைத்த சேனை கிழங்கை இந்த மசாலாவில் போட்டு நன்கு கலக்கவும். பிறகு தோசை தவாவை எடுத்து எண்ணெயை தூவி வறுத்து எடுக்கவும். பின்னர் கறிவேப்பிலை மிருதுவாகும் வரை வறுத்து தூவி பரிமாறவும். தயிர் சாதம் அல்லது லெமன் சாதம் தேங்காய் சாதம் புளி சாதம் போன்ற எந்த வகை சாதத்திற்கும் இந்த வறுவல் சரியான கலவையாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்