தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Capsicum Omlet: சுவை மட்டுமல்ல ஆரோக்கியமும் நிறைந்த குடைமிளகாய் ஆம்லேட்

Capsicum Omlet: சுவை மட்டுமல்ல ஆரோக்கியமும் நிறைந்த குடைமிளகாய் ஆம்லேட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 18, 2023 05:25 PM IST

உணவு வகைகளின் ரூசியை கூட்ட கூடுதல் காய்கறியாக சேர்க்கப்படும் குடைமிளகாயை வைத்து மாலை நேரத்தை இனிமையாக்கும் குடைமிளகாய் ஆம்லேட் செய்யும் முறையை பார்க்கலாம்.

சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த குடைமிளகாய் ஆம்லேட்
சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த குடைமிளகாய் ஆம்லேட்

ட்ரெண்டிங் செய்திகள்

அத்துடன் குடைமிளகாய் என்றதும் பலரும் சைனீஸ் வகை உணவுகள் நினைவுக்கு வரும். ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், மஞ்சூரியன் போன்ற உணவுகளில் தவறாமல் இடம்பிடிக்கும் காய்கறியாக குடை மிளகாய் உள்ளது.பச்சை தவிர சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் குடை மிளகாய், ஹோட்டல்களில் பல வகை உணவை அழகுபடுத்த பயன்படுகின்றன.

குடைமிளகாயில் வைட்டமின் ஏ,பி, சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. எடை குறைப்பு, புற்று நோய் தடுப்பு, உடல் வலியை குறைப்பது, பார்வத்திறனை மேம்படுத்துவது, தலைமுடி வளர்ச்சி போன்ற பல்வேறு நன்மைகளை நிறைந்துள்ளன.

குடைமிளகாயின் வடிவத்துக்கு ஏற்ப அதை வைத்து பல்வேறு வகைகளில் உணவுகாக தயார் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் மாலை நேரத்தை இனிமையாக்கும் விதமாக குடைமிளகாயை வைத்து குடைமிளகாய் ஆம்லேட் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

குடைமிளகாய் - ஒன்று

முட்டை - 2

வெங்காயம் - ஒன்று

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

கேரட் துருவியது - 2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு ஏற்ப

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

மிளகுத்தூள் - அரை ஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

குடைமிளகாய் ஆம்லேட் செய்முறை

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். குடைமிளகாயை மேற்பகுதி மற்றும் கீழ்பகுதி நறுக்கி விட்டு நடுவில் உள்ள விதைகளை எடுத்து விட வேண்டும். பின்னர் அதனை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வட்டமாக நறுக்கிய குடை மிளகாயை அதில் வைக்க வேண்டும். இருபுறமும் குடைமிளகாயை திருப்பி திருப்பி, பின்னர் அதன் உள்ளே அடித்து வைத்த முட்டை கலவையை ஊற்ற வேண்டும்.

இதையடுத்து ஒருபுறம் வெந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு இருபுறமும் திருப்பி திருப்பி விட்டு மிதமான தீயில் வேக வைத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவைமிகுந்த குடைமிளகாய் ஆம்லெட் ரெடி

நன்மைகள்

  • 'நார்ச்சத்து நிரம்பியிருக்கும் குடைமிளகாய் செரிமானத்தை சீராக்க உதவுகிறது. அத்துடன் உடலின் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
  • முட்டையில் புரதம், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன
  • குடைமிளகாயில் இருக்கும் நார்ச்சத்து, முட்டையில் இருக்கும் புரதம் ஆகியவை பசி உணர்வை தூண்டாமல் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்