தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tasty Ragi Adai : செம ருசியான ராகி அடை செய்யணுமா? அப்போ இதோ இந்த மாதிரி செய்து கொடுங்க!

Tasty Ragi Adai : செம ருசியான ராகி அடை செய்யணுமா? அப்போ இதோ இந்த மாதிரி செய்து கொடுங்க!

Divya Sekar HT Tamil
Apr 17, 2024 11:31 AM IST

Tasty Ragi Adai : உடலுக்கு ஆரோக்கியமான, சுவையான ராகி அடை செய்யலாமா? இது செய்வது ரொம்ப ஈஸி தான். வீட்டில் ஒருமுறை இந்த மாதிரி சமைத்து பாருங்கள்.

ராகி அடை
ராகி அடை

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு ஸ்பூன் அரிசி மாவை

இஞ்சி

பச்சை மிளகாய்

வெங்காயம்

ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல்

ஒரு ஸ்பூன் கேரட் துருவல்

ஒரு ஸ்பூன் வெள்ளை எள்

 தேவையான அளவு உப்பு

செய்முறை

உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடிய ராகி அடை எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். முதலில் ஒரு கப் ராகி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள்.

 அதில் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த வைத்த இஞ்சி, பச்சை மிளகாய் சேர்க்கவும். பின்னர் அதில் நறுக்கி வைத்த வெங்காயம், ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல்,ஒரு ஸ்பூன் கேரட் துருவல், ஒரு ஸ்பூன் வெள்ளை எள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

 அதாவது இந்த மாவை நீங்கள் தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.. தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும். கையில் ஈரப்பதத்துடன் இந்த மாவை நீங்கள் பிசைந்தால் நன்கு கையில் ஒட்டாமல் வழவழப்பாக வரும். பின்னர் அடைக்கு ஏற்றவாறு மாவை பிசைந்த பிறகு அதனை ஒரு பிளாஸ்டிக் கவரிலோ அல்லது வாழை இலையிலோ வைத்து தட்டவும்.

 இதனை தட்டும் போது கையில் தண்ணீர் நினைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் மாவை தட்டும் போது மாவு கையில் ஒட்டாது. பின்னர் சூடான தோசை சட்டியில் அந்த இலையோடு எடுத்து அடையை தோசை சட்டியில் போடவும்.

 ஒரு இரண்டு நொடி சூடானதும் அந்த இலையை எடுக்கவும் அப்பொழுதுதான் இலை மாவோடு ஒட்டாமல் அழகாக வரும். இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் இந்த ராகி அடையை உடையாமல் எடுக்கலாம். ஆனால் இந்த ராகி அடையை வயதானவர்களால் சாப்பிட முடியாது. அவர்களுக்கு நீங்கள் ராகி மாவை தண்ணீர் ஊற்றி தோசை போல் ஊற்றிக் கொடுத்தால் அவர்களால் அதை சாப்பிட முடியும். 

அவர்களுக்கு நீங்கள் ராகி தோசையை இதே முறையை பயன்படுத்தி சுட்டுக் கொடுக்கலாம். இனி இந்த முறையை பயன்படுத்தி ராகி அடை செய்து சாப்பிடுங்கள். ருசியாக இருக்கும்.

ராகியில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.

சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.

அதிக நார்ச்சத்து நிறைந்தது. இதனால், கேழ்வரகு உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது.

ராகி உங்களின் சருமத்திற்கு சிறந்த நண்பன். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.

ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள், முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

ராகியை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது.

கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவென்றால் அது ராகி. இது பால் சுரப்புக்கு மட்டுமல்ல தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ராகியில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்களில் கேன்சருக்கு எதிரான குணம் கொண்டது.

குளூட்டன் இல்லாத டயட் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு ராகி சிறந்த தேர்வு. இயற்கையிலே அது குளுட்டன் ஃப்ரியாக உள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்