தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Puliyodhrai Rice Thokku A Month Is Not Bad Amazing Instant Tamarind Paste Shut Up And Take A Rest

Puliyodhrai Rice Thokku : ஒரு மாதம் கெடாது! வித்யாசமான இன்ஸ்டன்ட் புளியோதரை பேஸ்ட்! செஞ்சு வெச்சுட்டு ரெஸ்ட் எடுங்க!

Priyadarshini R HT Tamil
Mar 19, 2024 11:00 AM IST

Puliyodharai Rice Thokku : இந்த புளியோதரைப் பேஸ்ட்டை எடுக்கும்போது ஈரமில்லாத கரண்டியைத்தான் பயன்படுத்த வேண்டும். தேவைப்படும்போது உபயோகித்துவிட்டு, காற்று, தண்ணீர் படாமல் நல்ல இறுக்கமாக மூடி வைத்துவிடவேண்டும்.

Puliyodhrai Rice Thokku : ஒரு மாதம் கெடாது! வித்யாசமான இன்ஸ்டன்ட் புளியோதரை பேஸ்ட்! செஞ்சு வெச்சுட்டு ரெஸ்ட் எடுங்க!
Puliyodhrai Rice Thokku : ஒரு மாதம் கெடாது! வித்யாசமான இன்ஸ்டன்ட் புளியோதரை பேஸ்ட்! செஞ்சு வெச்சுட்டு ரெஸ்ட் எடுங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

புளி – 50 கிராம்

(புளியை அலசி எடுத்து, கொதிக்கும் நீரில் அரைமணி நேரம் ஊறவைத்து கரைத்து சாறை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்)

புளியோதரை பொடி செய்ய தேவையான பொருட்கள்

வர மிளகாய் – 40 (காரத்துக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளலாம்)

மல்லி விதை – ஒன்றரை ஸ்பூன்

வெந்தயம் – ஒரு ஸ்பூன்

(மல்லி, வெந்தயத்தில் பாதியை மட்டும் வறுக்க வேண்டும், மிளாயில் 12 மட்டும் வறுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் மொறு மொறுவென வறுக்க வேண்டும்)

நல்லெண்ணெய் - ஒரு கிண்ணம்

(ஒரு கடாயில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெயை சேர்த்து அது சூடானவுடன், எஞ்சிய மிளகாயை சேர்த்து வறுக்க வேண்டும்)

பின்னர் வெந்தயம், மிளகாய் மற்றும் மல்லி விதைகளை ஆறவைத்து, தனியாக காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும்)

(பின்னர் எண்ணெயுடன் வறுத்த மிளகாயை ஆறவைத்து தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும்)

இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைக்கக் கூடாது. அதுதான் இந்த புளியோதரைக்கு வித்யாசமான சுவையை கொடுக்கும்.

ஏற்கனவே அதிகளவு மிளகாய் சேர்த்திருப்பதால் தாளிக்க தனியாக மிளகாய் கிள்ளி சேர்க்கக்கூடாது. இதுதான் புளியோதரை பேஸ்டுக்கு நல்ல காரத்தையும், நிறத்தையும் கொடுக்கிறது.

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு கிண்ணம்

கடுகு – அரை ஸ்பூன்

கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

கடலை – 4 டேபிள் ஸ்பூன் (தோள் உரித்து வறுத்தது)

கறிவேப்பிலை இலை – 5 கொத்து

(தாளிக்க உளுந்து பயன்படுத்தக் கூடாது. உளுந்து சேர்த்து பயன்படுத்தினால், நீண்ட நாட்கள் வராது. விரைவில் கெட்டுவிடும்)

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன்

கல் உப்பு – தேவையான அளவு

வெல்லம் – ஒரு ஸ்பூன் (பொடித்தது)

(நீண்ட நாட்கள் வைத்துக்கொள்வதற்கு கல் உப்பு பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அது விரைவில் கெட்டுப்போகாது)

(கட்டி பெருங்காயம் சேர்க்க விரும்பினால் வறுத்து பொடிக்கும் பொருட்களுடனே சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும்)

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு சேர்த்து பொரிந்தவுடன், எஞ்சிய வெந்தயம் மற்றும் கடலை பருப்பு சேர்த்து சிவக்க விடவேண்டும். அவை பொன்னிறமாக சிவந்து வந்தவுடன் கடலை சேர்க்க வேண்டும்.

பின்னர் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவேண்டும்.

அப்போதுதான் மஞ்சளின் நிறமும், பெருங்காயத்தின் மணமும் நன்றாக எண்ணெயில் இறங்கும்.

இதனுடன், புளிக்கரைசலை சேர்க்க வேண்டும். பின்னர் தனியாக அரைத்த மிளகாயை மட்டும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். நன்றாக கொதிக்க விடவேண்டும். கடைசியாக வறுத்துவைத்துள்ள வெந்தயம், மல்லி, மிளகாய் பொடியை சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்க விடவேண்டும்.

கடைசியாக வெல்லத்தை சேர்க்க வேண்டும். இது முற்றிலும் உங்களுக்கு தேவைப்பட்டால் சேர்க்கலாம். கடைசியாக வெல்லம் சேர்ப்பதால், புளி மற்றம் காரத்தின் சுவையை அது அதிகரித்து காட்டும்.

புளியோதரை பேஸ்ட் எண்ணெய் பிரிந்து, கெட்டியாக வந்தவுடன். அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவைக்க வேண்டும். ஆறியவுடன், ஒரு காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதை தேவைப்படும்போது எடுத்து, ஆறிய சாதத்தில் கலந்து சாப்பிட சுவை அள்ளும். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் துவையல் அல்லது வத்தலே போதுமானது.

இந்த புளியோதரைப் பேஸ்ட்டை எடுக்கும்போது ஈரமில்லாத கரண்டியைத்தான் பயன்படுத்த வேண்டும். தேவைப்படும்போது உபயோகித்துவிட்டு, காற்று, தண்ணீர் படாமல் நல்ல இறுக்கமாக மூடி வைத்துவிடவேண்டும். 

WhatsApp channel

டாபிக்ஸ்