Ghee Disadvantage: யாரெல்லாம் நெய் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்?
pixa bay
By Pandeeswari Gurusamy Mar 29, 2024
Hindustan Times Tamil
தலைமுடி வளர்ச்சி முதல் மூளை செயல்பாடு வரை நெய்யில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. இதன் காரணமாகவோ என்னவோ நம் வீட்டு பாட்டிகள் ரொட்டி முதல் லட்டுக்கள் வரை நெய் ஊற்றி நல்ல சுவையுடன் இருக்குமாறு செய்து கொடுத்துள்ளார்கள்.
pixa bay
ஆயுர்வேத முறைப்படி நாள்தோறும் நாம் சாப்பிடும் உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளில் மிக முக்கியமானதாக நெய் உள்ளது. அதே சமயம் இது எல்லோருக்கும் பொருத்தமான உணவு இல்லை என்கிற பேச்சும் உள்ளது. இதில் எந்தளவுக்கு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதோ, அதே அளவு உடலில் தீங்கு உண்டாக்கும் விளைவுகளும் உள்ளது.
பிரபல ஆயுர்வேத நிபுணர் டாக்டர் ரேகா ராதாமோனி, நெய் சாப்பிட்டால் சிலருக்கு ஏற்படும் பாதிப்புகளும், ஆபத்துகளும் குறித்து விவரித்துள்ளார். நீண்ட கால அஜீரண கோளாறு, வயிறு தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் நெய் அதிகமாக சாப்பிடக்கூடாது.
pixa bay
யாரெல்லாம் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமென்றால் அஜீரண கோளாறு இருப்பவர்கள் தங்களது உணவில் நெய் என்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது அவர்களுக்கு எதிரான உணவாகவே உள்ளது. இது சிலருக்கு மலமிளக்கியாக உள்ளது. நீண்ட கால செரிமாண கோளாறு, வயிறு சார்ந்த பிரச்னை இருப்பவர்கள் அதிகமாக நெய் சாப்பிடக்கூடாது.
உடலிலுள்ள கபத்தை அதிகரிக்கும் தன்மை நெய்க்கு அதிகம் உள்ளது. எனவே சளி மற்றும் இருமலுடன் கூடிய காய்ச்சல் இருக்கும்போது நெய் சாப்பிடுவதை தவிர்க்கவும். அதேபோல் சளி, இருமல் தொல்லை இருப்பவர்கள் வீட்டு வைத்தியம் என்ற பெயரில் நெய்யை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு வயிறு உப்புசம் ஆவது, அஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டால் நெய் சாப்பிடும் அளவை அவர்கள் குறைக்க வேண்டும். குறிப்பாக சளி, வயிறு கோளாறு இருப்பவர்கள் இதை கடைப்பிடிக்க வேண்டும். Here
கல்லீரல் மற்றும் மண்ணீரல் தொடர்பான பிரச்னை அல்லது நோய் பாதிப்பு இருப்பவர்கள் சாப்பாட்டில் நெய் எடுத்துக்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
பப்பாளிப்பழத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்