மசாலா பூண்டு தொக்கு; சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து லன்ச் கொடுத்தால் முழுவதும் காலியாகும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மசாலா பூண்டு தொக்கு; சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து லன்ச் கொடுத்தால் முழுவதும் காலியாகும்!

மசாலா பூண்டு தொக்கு; சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து லன்ச் கொடுத்தால் முழுவதும் காலியாகும்!

Priyadarshini R HT Tamil
Dec 10, 2024 03:32 PM IST

மசாலா பூண்டு தொக்கு செய்வது எப்படி என்று பாருங்கள்.

மசாலா பூண்டு தொக்கு; சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து லன்ச் கொடுத்தால் முழுவதும் காலியாகும்!
மசாலா பூண்டு தொக்கு; சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து லன்ச் கொடுத்தால் முழுவதும் காலியாகும்!

பூண்டு அதன் தனித்தன்மையான கார சுவை மற்றும் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது. தினமும் உணவில் பூண்டை கட்டாயம் சேர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே தினமும் ஒன்று அல்லது இரண்டு பூண்டை மென்று சாப்பிடலாம். அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. அது உங்கள் உடலில் எண்ணற்ற மாற்றங்களைச் செய்கிறது. அது என்ன நன்மைகளை உங்கள் உடலுக்கு செய்கிறது என்று பாருங்கள்.

இதய நோய் ஆபத்தை குறைக்கிறது

புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது.

பாக்டீரியாக்களுக்கு எதிரான உட்பொருட்கள் கொண்டது.

மூட்டுவலியைப் போக்குகிறது.

செரிமானத்தை அதிகரித்து செரிமான மண்டல ஆரோக்கியத்தை காக்கிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது

எலும்பு ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது.

ஆரோக்கியமான மற்றும் பளபளக்கும் சருமத்தை தருகிறது.

தேவையான பொருட்கள்

பூண்டு – 10 பல்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன் (உங்கள் கார அளவுக்கு ஏற்ப அதிகரித்துக்கொள்ளலாம் அல்லது குறைத்துக்கொள்ளலாம்)

ஆம்சூர் பொடி – ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

வெண்ணெய் – சிறிதளவு

மல்லித்தழை – சிறிதளவு

எலுமிச்சை பழச்சாறு – ஒரு ஸ்பூன்

செய்முறை

பூண்டை உறித்து சிறிய உரலில் சேர்த்து நன்றாக இடித்துக்கொள்ளவேண்டும். அடுத்து அதில் மிளகாய்த் தூள், மல்லித் தூள், ஆம்சூர் பொடி, கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள், சீரகம் என அனைத்தையும் சேர்த்து, கொஞ்சம் தண்ணீருடன் கலந்துகொள்ளவேண்டும்.

கடாயில் வெண்ணெய் சேர்த்து இந்த கலவையை சேர்த்து பிரட்டி மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பரான மசாலாப்பூண்டு தொக்கு தயார்.

இதை வடித்து ஆறவைத்த சாதத்தில் சேர்த்து, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு விட்டு, நன்றாக பிரட்டி எடுத்தால் மசாலா பூண்டு சாதம் தயார். இதற்கு அப்பளம் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதை உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நாள் லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்பினால் நன்றாக இருக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.