தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Soya Pepper Fry: பெப்பர் சிக்கனுக்கு நிகரான சோயா பெப்பர் ப்ரை செய்வது எப்படி?

Soya Pepper Fry: பெப்பர் சிக்கனுக்கு நிகரான சோயா பெப்பர் ப்ரை செய்வது எப்படி?

Kathiravan V HT Tamil
Jul 23, 2023 08:31 PM IST

”பெப்பர் சிக்கன் போன்ற சுவை தரும் சோயா பெப்பர் பரை சைவ உணவு விரும்பிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்”

சோயா பெப்பர் ப்ரை
சோயா பெப்பர் ப்ரை

ட்ரெண்டிங் செய்திகள்

ஊறவைத்த மீல் மேக்கரை கையால் இரண்டாக பிச்சிக்கொள்ளவும். இதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், கால் டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, சிறிது கறிவேப்பில்லை இலை, ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் சோளமாவு மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசையவும்.

வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கொதித்த பின் பிசைந்த சோயாவை பொன்னிறத்தில் பொறித்து எடுக்கவும்.

வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயை சேர்த்து சூடான உடன் பொடிப்பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கருவேப்பிலை இலையை போட்டு நன்கு வதக்கிய பின்னர் அரை டீஸ்பூன் கரம் மசாலா, ஒரு டீஸ்பூன் மல்லி தூள் மற்றும் முக்கால் டீஸ்பூன் மிளகாய்துளை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

மிக்சியில் அரைத்த ஒரு தக்காளியை சேர்த்து தேவையான அளவு உப்பை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும். பின்னர் கால் கப் தண்ணீரை சேர்த்து கொத்தித்த பின்னர் ஏற்கெனவே தயார் செய்து வைத்த சோயாவை சேர்த்து அரை டீஸ்பூன் மிளகு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சிறிது கிரேவியாக வேண்டும் எனில் கூடுதலாக தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்