Pav Bhaji: அட்டகாசமான பாவ் பாஜி! அசத்தலா செய்யலாம் வாங்க!ரெசிபி இதோ!
Pav Bhaji: வட இந்திய உணவுகள் பல தமிழ்நாட்டிலும் அதிகம் பிரபலம் அடைந்து வருகின்றன. சமீபகாலமாகவே இந்த உணவு வகைகள் அனைவராலும் விரும்ப படுகிறது.
வட இந்திய உணவுகள் பல தமிழ்நாட்டிலும் அதிகம் பிரபலம் அடைந்து வருகின்றன. சமீபகாலமாகவே இந்த உணவு வகைகள் அனைவராலும் விரும்பப்படுகிறது. அதில் முக்கிய உணவாக பாவ் பாஜி உள்ளது. இதனை பெரிய ஹோட்டல்கள் முதல் ரோட்டுக்கடை வண்டிகள் வரை முதன்மை உணவாக வழங்குகின்றன. பாவ் பாஜி முதன் முறையாக மராத்தி மாநிலத்தில் தோன்றியது அதன் பின் இது இந்தியா முழுவதும் பரவியது. வீட்டிலேயே பாவ் பாஜி செய்யும் எளிய முறையை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
400 கிராம் பன்னீர்
2 பன்
அரை கப் பெரிய வெங்காயம்
200 கிராம் காலிஃப்ளவர்
அரை கப் பட்டாணி
200 கிராம் தக்காளி
2 பீட்ரூட்
1 குடை மிளகாய்
7 பல் பூண்டு
5 வற மிளகாய்
எலுமிச்சை பழம்
1 டீஸ்பூன் சீரகம்
1 டிஸ்பூன் மஞ்சள் தூள்
1 டிஸ்பூன் மல்லி தூள்
2 டிஸ்பூன் பாவ் பாஜி மசாலா
1 டிஸ்பூன் கரம் மசாலா
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு வெண்ணெய்
சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
முதலில் காலிஃப்ளவரை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் பீடிரூட் மற்றும் பட்டாணியை வேக வைத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் மற்றும் வெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர் அதில் சீரகம் போட்டு வதக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். மேலும் பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவற்ற அரைத்த பேஸ்ட் ஆக ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் நறுக்கிய குடை மிளகாய், காலிஃப்ளவர்,பட்டாணி, பீட்ரூட், மற்றும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், பாவ் பாஜி மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை வதக்கவும்.
நன்கு வதங்கிய பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். பின் அதனை நன்கு மசித்து விடவும். சிறிது நேரத்திற்கு பிறகு அதில் பன்னீரை துருவி போட்டு அது நன்கு மசாலாவோடு ஒட்டுமாறு அதை கலந்து விட்டு அதை வேக விடவும். பின் அதில் சிறிதளவு கரம் மசாலா, பிழிந்த எலுமிச்சை சாறு, சிறிதளவு வெண்ணெய், மற்றும் கொத்தமல்லியை போட்டு கிளறி எடுத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து உருகிய பின் அதில் நறுக்கிய கொத்தமல்லி, சிறிதளவு பாவ் பாஜி மசாலா மற்றும் வற மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து கலக்கவும். பின்பு பாவ் பன்னை எடுத்து அதை பாதியாக வெட்டி அதை தோசை சட்டியில் போட்டு இந்த மசாலாவில் நன்கு தேய்த்து பின்னர் அதை திருப்பி போட்டு தேய்க்கவும். பிறகு ஒரு தட்டில் நாம் செய்து வைத்திருக்கும் பன்னீர் கலவையுடன் இந்த பாவ் பன்னையும் வைத்து அதை சுட சுட பரிமாறவும். சுவையான பாவ் பாஜி தயார்.
டாபிக்ஸ்