பாலுக்கு மாற்றாக பருகக்கூடிய ஆரோக்கியம் மிக்க மூலிகை டீ எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Sep 12, 2024
Hindustan Times Tamil
காலை எழுந்தவுடன் டீ அல்லது காபி பருகி புத்துணர்ச்சியுடன் நாளை தொடங்குவது இந்திய மக்கள் பெரும்பாலோரின் பழக்கமாக உள்ளது
டீயை பாலில் கலந்து தயார் செய்து பருகுவது காலம் காலமாக இருந்து வருகிறது. பால் டீ செரிமான பிரச்னை, வயிறு உப்புசம் போன்றவற்றை ஏற்படுத்தும்
பால் டீக்கு மாற்றாக இருக்ககூடிய இயற்கையான மூலிகை டீ வகைகளை பார்க்கலாம்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் செம்பருத்தி பூ டீ சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்துக்கு நல்லது. நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தி, ப்ரீ ரேடிகல்கள் காரணமாக செல்கள் சேதமடைவதை தடுக்கிறது
கெமோமில் பூக்களால் தயார் செய்யப்படும் டீ பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கிறது. இதில் உள்ள இனிமையான பண்புகள் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவுகிறது
கொழுப்பை கரைக்கவும், எடை குறைப்பு பண்புகளையும் கொண்டதாக ஊலாங் டீ உள்ளது. இது ரிலாக்ஸாக இருக்க உதவுவதுடன், தூக்கத்தை மேம்படுத்தி, மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
மல்லிகை பூவில் இருக்கும் பாலிபினால்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களை தணிக்க உதவுகிறது
கிளைசேஷன் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும் ப்ளூ டீ வயது மூப்பு அடையும் தோற்றத்தை தடுக்கிறது. இதில் இருக்கும் பிளேவனாய்ட்டுகள் மனஅழுதத்தை குறைக்க உதவுகிறது
‘குளிகை நேரம் என்றால் என்ன? குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?’