உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வேர்களுடன் கூடிய காய்கறிகள் எவை என்பதையும், அவற்றில் இருக்கும் சத்துக்களையும் தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Sep 18, 2024
Hindustan Times Tamil
வேர்கள் நிறைந்திருக்கும் காய்கறிகளில் ஊட்டச்சத்துகளின் அடர்த்தி அதிகமாக இருப்பதுடன், வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவையும் நிறைந்து காணப்படுகிறது
வேர் காய்கறிகளும் அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் பார்க்கலாம்
வைட்டமின் ஏ, சி, பி6 நிறைந்து காணப்படும் சீனிக்கிழங்கில் நார்ச்சத்து, பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. இவை சரும ஆரோக்கியத்தை பராமரித்து, மூளை செயல்பாட்டுக்கு ஆதரவு அளிக்கிறது. இதய ஆரோக்கியம்,ஸ செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்திகிறது
அதிகபடியான பீட்டா கரோடீன் உள்ளடக்கம், சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆக இருக்கும் கேரட் கூர்மையான பார்வதிறனை பெறவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. சரும ஆரோக்கியத்துக்கு நன்மை தருகிறது
போலேட், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கும் பீட்ரூட்டில் இடம்பிடித்திருக்கும் டயட்ரி நைட்ரேட்கள் இதய ஆரோக்கியத்துக்கு ஆதரவு அளிப்பதோடு, உடல் இயக்க செயல்திறனை அதிகரிக்கிறது
டர்னிப் என்று அழைக்கப்படும் கோசுக்கிழங்கு குறைவான கலோரி காய்கறியாக இருப்பதுடன் வைட்டமின் சி, கே, ஏ போன்றவையும், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. இது செரிமான ஆரோக்கியத்துக்கு ஆதரவு அளிப்பதோடு, எலும்பு ஆரோக்கியம், இதய செயல்பாட்டுக்கும் உதவுகிறது
வைட்டமின் சி, பொட்டாசியம், போலேட், நார்ச்சத்து நிறைந்திருக்கும் முள்ளங்கி வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இதில் இருக்கும் அதிகப்படியான நீர் உள்ளடக்கம் நீரேற்றமாக வைக்க உதவுகிறது
ஜிங்கரால் என்கிற உயிரியல் கலவைகள் அழற்சிக்கு எதிரான பண்புகள், ஆக்சிஜனேற்ற விளைவுகளை கொண்டுள்ளது. குமட்டலை போக்கி, வலி நிவாரணியாகவும், மூட்டு வலியையும் தணிக்கிறது
இரவில் உறங்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? உறங்கச் செல்லும் முன் இந்த 5 பானங்கள் உதவும்!