Fibre Food For Weigh Loss: ஒரு உணவில் இரட்டிப்பு பலன்கள்..! எடை குறைப்புக்கு உதவும் நார்ச்சத்து மிக்க ஸ்நாக்ஸ்கள்
ஒரு உணவில் இரட்டிப்பு பலன்கள் பெறும் விதமாக எடை குறைப்பு, உடலுக்கு தேவையான நார்ச்சத்து பெறும் விதமாக இருக்கும் ஸ்நாக்ஸ்கள் தயார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு நார்ச்சத்து என்பது மிகவும் அத்தியாவசிய ஊட்டச்சத்தாக உள்ளது. அந்த வகையில் உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதுடன், எடை இழப்புக்கும் உதவும் நார்ச்சத்து சிற்றுண்டி அல்லது ஸ்நாக்க்ஸ்களை தயார் செய்து சாப்பிடுவதால் உரிய பலனை பெறலாம்.
எடை குறைக்க நினைப்பவர்களுக்கு அவர் பின்பற்றும் டயட் முறை முக்கிய பங்களிப்பை தருகிறது. சில ஊட்டச்சத்துகள் எடை குறைப்புக்கு முக்கியமானதாக உள்ளது. அந்த வகையில் நார்ச்சத்து மிக்க உணவுகளை எடை குறைக்க திட்டமிடுபவர்கள், எடை குறைப்பில் இருப்பவர்கள் அன்றாடம் சாப்பிட வேண்டும்.
நார்ச்சத்து என்பது ஜீரணிக்க முடியாத கார்போஹைட்ரேட்டுகளைக் குறிக்கிறது. இது கரையக்கூடியதாக இருக்கலாம் (தண்ணீரில் கரைந்து) அல்லது கரையாததாக இருக்கலாம். கரையாத நார்ச்சத்து உங்கள் மலத்தில் உள்ளடக்கத்தில் சேர்ந்துவிடும். அதே வேளையில், மற்ற வகையான கரையக்கூடிய நார்ச்சத்து உங்கள் ஆரோக்கியத்தையும் வளர்சிதை மாற்றத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
