தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Multi Millet Laddu : காலையில் இதை செய்து கொடுங்க.. ரொம்ப நல்லது.. சுவையான மில்லட் லட்டு 15 நிமிடத்தில் செய்யலாம்!

Multi Millet Laddu : காலையில் இதை செய்து கொடுங்க.. ரொம்ப நல்லது.. சுவையான மில்லட் லட்டு 15 நிமிடத்தில் செய்யலாம்!

Divya Sekar HT Tamil
Jul 18, 2023 08:56 AM IST

சுவையான ஆரோக்கியமான மில்லட் லட்டு எப்படி செய்வது என்பது குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.

மில்லட் லட்டு
மில்லட் லட்டு

ட்ரெண்டிங் செய்திகள்

ராகி மாவு - 1/3 கப்

கம்பு மாவு - 1/3 கப்

சோளம் மாவு - 1/3 கப்

முந்திரி - 10

பாதாம் - 10

நாட்டு சர்க்கரை - 1 1/3

ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்

நெய் - 1/3 கப்

செய்முறை

மில்லட் லட்டு ஒரு ஆரோக்கியமான மற்றும் மிகவும் எளிதான ரெசிபி. இதில் பலவகையான தினைகள் உள்ளன. உங்கள் கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப 1 அல்லது அதற்கு மேற்பட்ட தினை கொண்டும் செய்யலாம். இதைச் செய்ய 15 நிமிடங்கள் ஆகும். மிகவும் சுவையாக இருக்கும். இது 3 அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

4 வகையான தினை மாவு, ராகி மாவு, கம்பு மாவு, சோளம் மாவு, ஆகியவற்றை எடுத்துள்ளேன். ஒவ்வொன்றும் 1/3 கப். மொத்தம் 1 1/3 கப் தினை மாவு எடுத்து கொள்ளுங்கள். இந்த தினை மாவு இல்லை என்றால் எந்த திணை மாவு கிடைக்கிறதோ அதை உபயோகிக்கலாம். பச்சை வாசனை போகும் வரை அனைத்து மாவையும் குறைந்த தீயில் வதக்கவும். அதன் நிறம் சற்று மாறும் வரை வதக்கவும். பின்னர் இதனை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

நட்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள். அதாவது 10 முந்திரி, 10 பாதாம் போன்றவை. இவற்றை கடாயில் போட்டு வறுக்கவும். கரடுமுரடான பொடியாக அரைக்கவும். பின்னர் அரைத்து வைத்த இந்த நட்ஸ்களையும், வறுத்து வைத்த திணைமாவையும் கலக்கவும். நட்ஸ் சிறந்த சுவையை கொடுக்கும். லட்டுவின் சுவையை அதிகரிக்கும்.

பின்னர் சம அளவு அதாவது மாவின் அளவுக்கு நாட்டு சர்க்கரை நாட்டு சர்க்கரை 1 1/3 கப் எடுத்துக் கொள்ளவும்.இவற்றை மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்கவும். 1/3 கப் வெதுவெதுப்பான நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து லட்டு செய்ய ஆரம்பிக்கவும். அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம், இல்லையெனில் அது உடைந்து விடும்.

உங்களால் லட்டு செய்ய முடியவில்லை என்றால், பொடி செய்து சேமித்து வைக்கவும். இது சுவையாக இருக்கும். லட்டுவை அறை வெப்பநிலையில் 3 மாதங்கள் கூட சேமிக்கலாம். இந்த ஆரோக்கியமான, சுவையான லட்டை வீட்டில் செய்து பார்த்து சாப்பிட்டு மகிழுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்