மணக்க மணக்க பிரியாணி மசாலா செய்வது எப்படி? இப்படி செய்து சுவையில் தெறிக்கவிடுங்கள்!
மணக்க மணக்க பிரியாணி மசாலா செய்வது எப்படிஎன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி செய்து சுவையில் தெறிக்கவிடுங்கள். சூப்பர் சுவையான பிரியாணி மசாலா ரெசிபி இதோ உள்ளது.

பிரியாணி என்றால் பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, மீன் பிரியாணி என அசைவ பிரியாணிகள், வெஜிடபிள் பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, பன்னீர் பிரியாணி, மீல் மேக்கர் பிரியாணி என சைவ பிரியாணி என எண்ணற்ற பிரியாணி வகைகள் உள்ளது. இதன் சுவை அலாதியானது மற்றும் பிரியாணியை செய்வதும் எளிதானது. ஒரு மதிய உணவுக்கு சாதம், சாம்பார், ரசம், மோர், காய்கறி, கூட்டு, பொரியல் என இத்தனை டிஷ்கள் செய்வதற்கு பதில் ஒரு பிரியாணியை செய்துவிட்டு, அதற்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடியையும் செய்துவிட்டு, அமைதியாக இருந்துகொள்ளலாம். பிரியாணி அத்தனை எளிமையான மதிய உணவு. இதற்கு தேவைப்பட்டால், 65 ரெசிபிக்களும், கிரேவி ரெசிபிக்களும் செய்துகொள்ளலாம். பிரியாணி செய்வதற்கு பிரத்யேக மசாலாக்களை உபயோகிக்க வேண்டும். அப்போது பிரியாணிக்கு தனிச்சுவை கொடுக்கும். இதற்கான மசாலாக்களை கடைகளில் வாங்கும்போது அதில் கலப்படம் இருக்கும். ஆனால், நீங்கள் பிரியாணிக்கான மசாலாக்களையும் வீட்டிலே தயாரிக்க முடியும். அதை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
பட்டை – 25 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்