தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Salna Recipe: அடடே! சிக்கன் போடாத ஹோட்டல் சால்னா.. ஈஸியா செய்யலாம் மக்காஸ்! - செய்முறை விளக்கம் இங்கே! - ட்ரை பண்ணுங்க!

Salna Recipe: அடடே! சிக்கன் போடாத ஹோட்டல் சால்னா.. ஈஸியா செய்யலாம் மக்காஸ்! - செய்முறை விளக்கம் இங்கே! - ட்ரை பண்ணுங்க!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 03, 2023 12:25 PM IST

சுவையான ரோட்டுக்கடை சால்னா செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.

சுவையான ரோட்டக்கடை சால்னா!
சுவையான ரோட்டக்கடை சால்னா! (rakskitchen, Sharmis Passions)

ட்ரெண்டிங் செய்திகள்

நன்றாக வெங்காயம் வதங்க ஆரம்பித்த உடனேயே நாம் அதில் ஒரு சின்ன துண்டு இஞ்சி, நான்கு பல்லு பூண்டை சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதனுடன் நறுக்கி வைத்த மூன்று தக்காளிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் அதனுடன் கொஞ்சம் புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

தக்காளி நன்றாக மசியும் அளவிற்கு அதை நாம் எடுத்துக் கொள்ளலாம். தக்காளி நன்றாக வதங்கிய பின்னர், அதனுடன் இரண்டு ஸ்பூன் வத்தல் பொடி, கொஞ்சம் மஞ்சள் தூள், மூன்று டீஸ்பூன் தனியாத்தூள் உள்ளிட்டவற்றை ஒன்றாக சேர்த்துக் கொள்ளுங்கள். 

அதனுடன் தேவையான அளவிற்கு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பு சேர்ப்பதனால் தக்காளியானது சீக்கிரமாக வதங்கிவிடும். இதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை நன்றாக வதக்குங்கள். அதன் பின்னர் அதை லேசாக வதக்கி கீழே இறக்கி அதை நன்கு ஆற வைக்க வேண்டும். அவை நன்கு ஆறிய உடன் அதை மிக்ஸியில் போட்டு நன்றாக மையாக அரைக்க வேண்டும்

இந்த நிலையில் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் கிராம்பு ஒரு சின்ன துண்டு பட்டை, பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு எண்ணெயுடன் சேர்த்து நன்றாக வதக்குங்கள். இவை நன்றாக பொரிந்த உடன் ஒரு பெரிய வெங்காயத்தை நன்றாக நறுக்கி அதில் போட்டுக் கொள்ளுங்கள். 

கூடவே ஒரு பச்சை மிளகாயும் கருவேப்பிலையும் சேருங்கள். அனைத்தும் நன்றாக சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருந்த மசாலாவை இப்போது இந்த குக்கரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நன்றாக பச்சை வாசனை செல்லும் அளவிற்கு வதக்கிக் கொள்ளலாம். இந்த நிலையில் அதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிய நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். அதன் பின்னர் மூன்று விசில் வைத்து விட்டு எடுத்தால் சுவையான சால்னா ரெடி! 

WhatsApp channel

டாபிக்ஸ்