தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Soya Keema Gravy: 5 நிமிடம் போதும்..சுவையான சோயா கீமா பச்சை பட்டாணி கிரேவி செய்யலாம்!

Soya Keema Gravy: 5 நிமிடம் போதும்..சுவையான சோயா கீமா பச்சை பட்டாணி கிரேவி செய்யலாம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 21, 2023 12:31 PM IST

சுவையான சோயா கீமா பச்சைப் பட்டாணி கிரேவி செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

சோயா கீமா பச்சை பட்டாணி கிரேவி
சோயா கீமா பச்சை பட்டாணி கிரேவி

ட்ரெண்டிங் செய்திகள்

அது இல்லை என்றால் நம்மால் வழக்கமாக உண்ணும் உணவில் எடுத்துக் கொள்ளவே முடியாது. சாலையோரம் செல்லும் போது நாவூரும் உணவுகளைக் கண்டால் வாகனத்தை நிறுத்திச் சாப்பிட்டு விட்டு வீட்டிற்குச் செல்பவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.

அப்படித் திரும்பும் திசையெல்லாம் கிடைக்கக்கூடிய உணவுகளில் ஒன்று தான் சோயா கீமா பச்சை பட்டாணி கிரேவி. அனைத்து சைனீஸ் ரெஸ்டாரண்டுகளிலும் கிடைக்கும். பலருக்கும் பிடித்த ரெசிபியில் இதுவும் ஒன்று.

இதைச் செய்வது மிகவும் கடினமான காரியம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைச் செய்வது மிகவும் எளிது. வாருங்கள், சோயா கீமா பச்சை பட்டாணி கிரேவி செய்வது எப்படி என்பது குறித்து இங்கே காணலாம்.

தேவையான பொருட்கள்

  • 50 கிராம் மீல் மேக்கர்
  • இரண்டு பெரிய வெங்காயம்
  • நான்கு தக்காளி
  • ஒரு கொத்து கருவேப்பிலை
  • கால் கப் பச்சை பட்டாணி
  • கால் தேக்கரண்டி சோம்பு
  • ஒரு துண்டு பட்டை
  • தேவையான அளவு கொத்தமல்லித் தழை
  • மூன்று மேசைக்கரண்டி சமையல் எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

அரவைக்கு தேவையான பொருட்கள்

  • இரண்டு மேசைக்கரண்டி தேங்காய்த் துருவல்
  • ஒரு துண்டு இஞ்சி
  • அரை தேக்கரண்டி சோம்பு
  • இரண்டரை தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • ஒரு தேக்கரண்டி மல்லித்தூள்
  • பத்து முந்திரிப்பருப்பு
  • ஐந்து பூண்டு பல்

கிரேவி செய்முறை

  • முதலில் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி தழை உள்ளிட்டவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • அரவைக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீரை ஊற்றி அதில் மீல் மேக்கரை போட்டு பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • நன்கு ஊர் ஏதும் அந்த மீல் மேக்கரை சாதாரண தண்ணீரில் இரண்டு முறை அலசி நன்கு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சுத்தமாக அதில் தண்ணீர் இருக்கக் கூடாது.
  • பின்னர் அந்த மீல் மேக்கர் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று போதும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சோம்பு மற்றும் பட்டை உள்ளிட்டவற்றைப் போட்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்க வேண்டும்.
  • பின்னர் அதில் தயாராக இருக்கும் மீல் மேக்கரை போட்டு வதக்க வேண்டும். பின்னர் அதில் தக்காளி, பச்சைப் பட்டாணி உள்ளிட்டவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும்.
  • அனைத்தும் வதங்கிய பிறகு அதில் தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, மிளகாய்த் தூள், மல்லி தூள், முந்திரி பருப்பு உள்ளிட்டவற்றைப் போட்டு மூடி மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
  • அதில் இருக்கும் தண்ணீர் வற்றிப் போய் எண்ணெய் பிரிந்து மேலே வரும். அப்போது நறுக்கி வைத்திருக்கக்கூடிய கருவேப்பிலை, கொத்தமல்லி உள்ளிட்டவற்றைத் தூவி இறக்கி வைத்து விட வேண்டும்.
  • அவ்வளவுதான் சுவையான து சோயா கீமா பச்சை பட்டாணி கிரேவி தயார். இதோடு சோறு, இட்லி, சப்பாத்தி, தோசை, நான், பூரி, இடியாப்பம் உள்ளிட்ட அனைத்து உணவுகளும் சேர்த்துச் சாப்பிடலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்