Curd Semiya: டிஃபரெண்ட் ஸ்டைலில் தயிர் சேமியா செய்வது எப்படி? ருசியான ரெஸிபி இதோ!-how to make curd semiya in easy steps - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Curd Semiya: டிஃபரெண்ட் ஸ்டைலில் தயிர் சேமியா செய்வது எப்படி? ருசியான ரெஸிபி இதோ!

Curd Semiya: டிஃபரெண்ட் ஸ்டைலில் தயிர் சேமியா செய்வது எப்படி? ருசியான ரெஸிபி இதோ!

Suguna Devi P HT Tamil
Sep 29, 2024 02:44 PM IST

Curd Semiya: நாம் தினமும் உபயோகப்படுத்தும் சேமியாவில் உப்புமா, பாயாசம் போன்றவை செய்து சாப்பிட்டு இருப்போம். சில சமயங்களில் உப்புமா செய்து தந்தால் மிகவும் சலிப்புடன் இருப்பர். இதனை தவிர்க்க சேமியாவில் பல விதமான வெரைட்டியான உணவுகளை தயார்செய்துதரவேண்டும்.

Curd Semiya: டிஃபரெண்ட் ஸ்டைலில் தயிர் சேமியா செய்வது எப்படி? ருசியான ரெஸிபி இதோ!
Curd Semiya: டிஃபரெண்ட் ஸ்டைலில் தயிர் சேமியா செய்வது எப்படி? ருசியான ரெஸிபி இதோ!

தேவையான பொருட்கள்

150 கிராம் சேமியா

ஒரு மாதுளை பழம்

2 கப் தயிர்

1 கப் பால்

சிறிதளவு இஞ்சி

2 பச்சை மிளகாய்

12 முந்திரி பருப்பு

12 உலர் திராட்சை

சிறிதளவு கடுகு

சிறிதளவு சீரகம் 

ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு

ஒரு டேபிள் ஸ்பூன்  கடலை பருப்பு

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு கறிவேப்பிலை

சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

முதலில் மாதுளம் பழத்தை உரித்து விதைகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாலை நன்கு காய்ச்சி எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சேமியா, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும், பின்னர் சிறிது நேரம் வேக வைத்து, வெந்ததும் அதனை எடுத்து தண்ணீரில் போட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, கடுகு, சீரகம் போட்டு வறுக்கவும்.  அவற்றை நன்கு வறுத்த பின், அதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு வறுக்க வேண்டும். பருப்பு நிறம் மாறும் வரை வறுக்கவும். பின்னர் அதில் நறுக்கி வைத்து இருக்கு இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வறுக்க வேண்டும். 

இதில் இஞ்சியின் வாசம் போன பின்பு, முந்திரி பருப்பு, உலர் திராட்சை போட்டு வறுக்க வேண்டும். முந்திரி பருப்பு நிறம் மாறியதும், கறிவேப்பிலை போட்டு அடுப்பை விட்டு இறக்கி வைக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி லேசாக கடைந்து எடுத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் வேக வைத்து எடுத்த சேமியா, தேவையான அளவு உப்பை போட்டு நன்கு கலக்கவும்.  பின்னர் அதில் கடைந்து வைத்திருக்கும் தயிரை ஊற்றி நன்கு கிளறவும். மேலும் பாலை சிறிது சிறிது ஊற்றி கிளறவும். வறுத்து வைத்திருக்கும் பருப்புகளையும் சேர்க்கவும். கடைசியாக மாதுளை பழ விதைகள், கொத்தமல்லியை சேர்த்து விடவும். பின்னர் இதனை ஒரு மணி நேரம் ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும். இப்பொழுது ஜில்லென்று மற்றும் அட்டகாசமாக இருக்கும் தயிர் சேமியா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.